பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 நினைவு அலைகள் அவ்வீட்டிலிருந்து ஒர் அம்மையார், வண்டியண்டை வந்தார். முன் வரிசையில் இடம் இல்லாததைக் கண்டு மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். இதற்குள் அடுத்த வரிசையில் இருந்த ஒருவர் எழுந்து இடம் கொடுத்தார். அம்மையாரை ஏற்றிக்கொண்டு வண்டி புறப்பட்டது. சாலை, மேடு பள்ளம் நிறைந்திருந்தது. அச்சாலையில் பயணம் செய்தால், குடல் வெளியே வந்துவிடும்போல் குலுக்கிற்று. பதினைந்து இருபது மணித்துளிகள் எப்படியோ சென்றன. பேருந்து நின்றது, நடத்துநர் இறங்கி, என்னிடம் வந்தார். 'அய்யா! இதுதான் கோவூர்; இதோ நேரே இருப்பது சன்னதித் தெரு' என்று சொன்னார். நான் இறங்கிச் சென்றேன். அப்போது, அடுத்து அமர்ந்திருப்பவரின் முகத்தைப் பார்த்தேன்; அப்போதும் அவர் முகம் எள்ளும் கொள்ளும் பொரியும்படி இருந்தது. 'முதல் பயணமே, வம்போடு தொடங்குகிறதே! என்னும் குறையோடு சன்னதித் தெருவை நோக்கி நடந்தேன். வழியில் தென்பட்டவரை, ஊராட்சி மன்றத் தலைவர் வீடெங்கே என்று கேட்டேன். கோவூர் ஊராட்சி மன்றத் தலைவர் அவர் காட்டிய வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கே, திண்ணையின்மேல் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் என்னைக் கண்டதும் எழுந்து நின்று பணிவுடன் கும்பிட்டார். 'என் பெயர், பள்ளிகொண்டான் பிள்ளை' என்று கூறி, என்னைத் திண்ணையில் அமரச் சொன்னார். நான், உதவிப் பஞ்சாயத்து அதிகாரி' என்று என்னை நானே அறிமுகப்படுத்திக் கொண்டேன். சில மணித்துளிகளில் இளநீர் வந்தது; குடித்து, தெம்பு பெற்றேன். ஊராட்சி மன்றத்தின் கூட்டக் குறிப்புகள், வரவு செலவுக் கணக்கு, அஞ்சல்களின் கோப்பு, அஞ்சல் சேமிப்புக் கணக்குப் புத்தகம், ஆகியவற்றைக் கொண்டுவந்து வைத்தார். அக்காலத்தில் பல ஊராட்சி மன்றங்களுக்கு வரவு குறைவு. நிலவரியோடு வாங்கும் செஸ் ஸை ஆண்டிற்கு ஒரு அல்லது இருமுறை வட்ட ஆட்சி அலுவலகத்தில் இருந்து அனுப்பிவைப்பது உண்டு. பொதுக்குளம் அல்லது ஏரியில் மீன் பிடிக்கக் குத்தகை விடுவதுண்டு. அப்பனம் ஊராட்சிமன்றத்திற்கு வந்து சேரும். எப்போதோ ஒருவேளை புறம்போக்கு நிலங்களில் பட்டுப்போன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/491&oldid=787395" இலிருந்து மீள்விக்கப்பட்டது