பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 449 மரத்தையோ, மரங்களையோ ஏலம் விட்டு, அப்பணத்தையும் ஊராட்சிமன்ற நிதியில் சேர்ப்பதுண்டு. பெரும்பாலான ஊர்களில் செஸ் பணம் குறைவாகவே யிருக்கும். எங்கோ ஒர் ஊருக்குத்தான் ஆண்டிற்கு நூறு ரூபாய்க்குமேல் செஸ். தொகை வரும். இதைவிட மீன் பிடிக்கும் குத்தகைப் பணமே பல ஊர்களில் அதிகமாக இருக்கும். இவற்றைக் கொண்டு, ஊராட்சி மன்றங்கள் தெருக்களை மேடு பள்ளம் இல்லாமல் பராமரிக்க வேண்டும்; தெருவிளக்குப் போட வேண்டும்; குடிநீர் வசதி செய்து தரவேண்டும். திருப்பெரும்புதூர் வட்டத்தில், பல ஊர்களில், பொதுக்குளத்தில் இருந்துதான் குடிநீர் கொண்டுவரவேண்டும். அக்குளத்திற்குக் காவலர் நியமிப்பது முன்னுரிமை பெறும். திங்களுக்கு ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை சம்பளம். பல ஊராட்சி மன்றங்களின் அக்கால நிதி நிலைமை அதற்குமேல் எவ்விதப் பொதுப்பணியும் செய்வதற்கு இடங்கொடுக்காது. கோவூர் ஊராட்சி மன்றம், சிறிது தாராள வருவாய் உடையது. எனவே, தெருக்களை அப்போதைக்கு அப்போது செப்பம் இடுவது உண்டு. தெரு விளக்குகள் போட்டிருந்தார்கள். அக்காலத்தில் சிற்றுார்களுக்கு மின்னொளி எட்டவில்லை. கற்கம் பங்களையோ, தண்டவாளக் கம்பங்களையோ நட்டு அவற்றின் உச்சியின் மண்ணெண்ணெய்க் கூண்டு விளக்குகளைப் பொருத்தி வைப்பார்கள். நாள்தோறும் காலையில் அவற்றைத் துடைக்கவும் மாலையில் விளக்கேற்றவும் பகுதிநேர ஊழியர்களை வேலைக்கு வைப்பதுண்டு. ஊராட்சி மன்ற நிதியை அஞ்சல் சேமிப்பு வங்கியில் போட்டு வைத்து, தேவைப்படும்போது மட்டும் வாங்கிக் கொள்ள வேண்டும். கோவூர் ஊராட்சிமன்ற நடவடிக்கைகள் மனநிறைவைக் இகாடுத்தன. அதன் கணக்கையும் கூட்டக் குறிப்புகளையும் தணிக்கை செய்துவிட்டு, மாலைப்பொழுது அருகில் உள்ள குன்றத்துர் போய்ச் சேர்ந்தேன். ஊர்களில் இருந்ததைப் போல், கோவூரில் ஊராட்சி "இ"லகம், தலைவரின் வீட்டிலேயே இருந்தது. 9*றத்துர் ஊராட்சி மன்றத் தலைவர் குன்றத்தூரிலோ அதற்கென ஒரு கட்டடம் இருந்தது. அங்குச் "ம சில பதிவேடுகளைப் பார்த்தேன். செ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/492&oldid=787396" இலிருந்து மீள்விக்கப்பட்டது