பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63. புயலுக்கு முன் அமைதி முகலிவாக்கம் ஊராட்சித் தலைவர் இரண்டாங்கட்டளையிலிருந்து புறப்பட்டு முகலிவாக்கம் என்னும் ஊருக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கு ஊராட்சித் தலைவர் வீட்டை எளிதில் கண்டுகொண்டேன். அவரும் திண்ணைமேல் உட்கார்ந்திருந்தார். நான் யாரென்று அறிவித்ததும், அன்போடும் மதிப்போடும் வரவேற்றார். காப்பிக்கு ஏற்பாடு செய்தார். அது வருவதற்குள் கூட்டக் குறிப்பு நூலும் கணக்கும் கொண்டு வந்து வைத்தார். ஆண்டுக்கு ஒரு கூட்டமே நடந்தது. ஆண்டின் இறுதியில், அவ்வாண்டு வரவு செலவுக் கணக்கை மன்றக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற்று, மாவட்டப் பஞ்சாயத்து அலுவலருக்கு அனுப்பி வைத்தார். என் தணிக்கைக்கு உட்பட்ட காலத்தில் நான்கு முறை செஸ் பணம் வந்தது. ஒவ்வொரு முறையும் சொற்பத் தொகையே, அவற்றின் மொத்தம் எந்தப் பயனுள்ள வேலைக்கும் போதாது. மொத்தப் பணம் அஞ்சல் சேமிப்பு வங்கியில் பாதுகாப்பாக இருந்தது. இரு கூட்டங்கள் நடந்தன. இரண்டு ஆண்டுக் கணக்குகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இரண்டு அஞ்சல்கள் அனுப்பப்பட்டன. அஞ்சல் செலவு இரண்டு போக, ஒரே ஒரு செலவினம் எழுதப்பட்டிருந்தது. அது &татутэгот 7 ஊராட்சிமன்றத்தின் பயனுக்காக, ஒர் ஊற்றுப்பேனா வாங்கிய செலவு ரூபாய் மூன்று. இச் செலவு ஒரு சங்கடமான நிலையை உருவாக்கியது. ஊராட்சி மன்றங்கள் உருவான சூழல் ஊராட்சி மன்றங்கள் தொடங்கிய காலத்திலும், அதற்குப் பிறகு பத்துப் பதினைந்து ஆண்டுகள் வரையிலும், மன்றத் தலைவர் பதவிக்கோ, உறுப்பினர் பதவிக்கோ போட்டிபோட நாட்டுப்புற மக்கள் உற்சாகத்துடன் முன் வருவது கிடையாது. தொடக்க காலத்தில் ஊராட்சி மன்றங்களை அமைக்க, கெளரவி' அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அமைப்பாளர், தபசிசி எல்லைக்குட்பட்ட சிற்றுருக்குச் சென்று, அங்கே பத்துப் பே'ை கூட்டி, ஊராட்சி மன்றம் (பஞ்சாயத்து) அமைப்பார். பல ஊர்களில், அந்தப் பத்துப் பேரும் ஒரே நேரம் கூடுவதும் அரிது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/497&oldid=787401" இலிருந்து மீள்விக்கப்பட்டது