பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 459 "பணம் என்றைக்கு வருமோ? நாளைக்கே வரலாம்; பத்து நாள்கள் பொறுத்தும் வரலாம்; திட்டமாகச் சொல்ல முடியவில்லையே! அப்படியிருக்க நீங்கள் எத்தனை நாள் இங்கே தங்கியிருக்க முடியும்? 'நீங்கள் ஊருக்குப் போங்கள். பணம் வந்ததும், காலதாமதமின்றி வாங்கி, அன்றைக்கே அங்கேயே மணியார்டரில் அனுப்பி விடுகிறேன். ' இப்படி அவர் கூறினார். அது சரியாகப்பட்டது. அவர் நம்பிக்கைக்கு உரியவராகத் தென்பட்டார். எனவே, வேகா வெயிலில் அங்கு இருந்து புறப்பட்டு , பல்லாவரம் சென்றேன். அங்கு இரயில் ஏறி, சைதாப்பேட்டையை அடைந்தேன்.அலுவலகஞ் சென்று வேலை பார்த்தேன். பிழைக்கத் தெரிந்திருந்தால், நேரே சென்னைக்குச் சென்று ஒய்வு பெற்று இருக்கலாம். உழைப்பு என்னுடன் பிறந்த நோய் ஆயிற்றே! மூன்றாம் நாள், நாற்பத்தொன்பது ரூபாய் எட்டனா, பண ஆணை வழி வந்து சேர்ந்தது. அதைப்பெற்று முறைப்படி மாவட்ட ஆணைக்குழுவின் கணக்கில் கட்டிவிட்டேன். எட்டனா, பன ஆணைக்கான செலவு. இவ்விவகாரம் சிக்கல் இல்லாமல், சரியாக, முடிந்ததைப் பற்றி கொண்ட மகிழ்ச்சி, நீர்மேற் குமிழி என்பது அப்போது தெரியாது. கெளல் பஜார் ஊராட்சி கலைக்கப்பட்டது: அதன் பதிவேடுகளைப் பெற்றுக் கொண்டேன். கணக்குகளைத் தணிக்கை செய்தது. அதன்படி, மாவட்ட ஆணைக்குழுவிற்குச் சேர வேண்டிய தொகையை வாங்கிக் கொண்டது; இத்தகவல்களைக் கொண்ட அறிக்கையை எழுதினேன். அதன்படிவத்தைக் கையால் எழுதினேன். அதோடு, பணத்தைச் சேர்ப்பித்த இரசீதை இணைத்தேன். மாவட்ட ஆணைக்குழுவின் செயலருக்கு அனுப்பி வைத்தேன். அன்றைய வேலையும் பாக்கியில்லாமல் முடிந்தது என்னும் பூரிப்போடு, மாலை வீடு திரும்பாமல், திருவல்லிக்கேணி கடற் கரைக்குச் சென்றேன். நண்பர்கள் டி.டி. அய்யாசாமி, தே.சா. குஞ்சித பாதம், தே. சா. பஞ்சாபகேசன் ஆகியோர் கூடும் இடத்திற்குச் சென்றேன். என் உறவினராகிய காஞ்சிபுரம் க.நா. விசுவநாதன் என்பவரும் வந்து சேர்ந்தார். நெடுநேரம் காற்று வாங்கிவிட்டு வீடு திரும்பினோம். புயலுக்கு முந்தி அமைதி; தொல்லைக்கு முன்னே கும்மாளம்’ என்று அன்று நினைக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/502&oldid=787408" இலிருந்து மீள்விக்கப்பட்டது