பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. செய்யாத குற்றத்துக்கு விளக்கமா? மெமோ வந்தது கெளல்பஜார் ஊராட்சி மன்றத்தைப் பற்றிய என்னுடைய விரிவான அறிக்கை சென்ற சில நாள்களில், எனக்கு ஒரு 'மெமோ வந்து சேர்ந்தது. மாவட்ட ஆணைக்குழுவினர் அலுவலகத்திலிருந்து ஆட்சிக் குழுவின் தலைவர் சார்பாகவே அது வந்தது. மாவட்டப் பஞ்சாயத்து அலுவலர் திரு நரசா ரெட்டியார் ஆட்சிக் குழுத் தலைவருக்காக அதை என்னிடம் நேரில் கொண்டு வந்து கொடுத்தார். அவர்தான் என் கல்லூரி நண்பர், திரு தனசிங்கிற்குப் பதில் வந்து சேர்ந்தவர். அவர் நேர்மையாளர்; சுறுசுறுப்பாளர்; நல்ல உழைப்பாளி: விருந்தோம்பலுக்கும் பெயர் பெற்றவர். என்னிடம் நேரில் 'மெமோ'வைக் கொடுக்கும்போது, அவர் சங்கடப்பட்டார். உடன் இருந்த அலுவலகத் தலைமை எழுத்தரைப் பார்த்து, 'என்ன நாடார். இப்படியொரு மெமோ வருகிறதே? மாவட்ட ஆட்சிக் குழுவின் தலைவர் பெரிய மனிதர், பட்டதாரி, அவர் பெயரில் இப்படியா தேவையற்ற 'மெமோ வருவது? ஆட்சிக் குழுச் செயலர் அரங்காத நாயுடு என்ன செய்கிறார்? அவராவது இதைத் தடுத் திருக்கலாமே! இப்படி அவர் கூறியதற்குப் பதிலாக, தலைமை எழுத்தர், நான் சொல்லக் கூடாதுங்க. இங்கே சூப்பரெண்டென்ட் சுப்பிரமணிய அய்யர் நினைத்ததே சட்டம். தலைவர் முதலியார் அவர் நீட்டின இடத்தில் கையெழுத்துப் போட்டு விடுவார்' என்றார். 'இருக்கட்டும் வெந்நீர் ஊற்றி வீட்டைக் கொளுத்த முடியாது. என்று தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு. அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று திரு நரசா ரெட்டியார் எனக்கு ஆறுதல் கூறி அனுப்பினார். _ வந்த மெமோ என்ன சொல்லிற்று? 'கெளல் பஜாருக்குச் சென்ற நீ, அங்கிருந்து பெற வேண்டிய பணம் வரும் வரையில் அங்கேயே தங்கியிருந்தால், பண ஆணைக்கான அரை ரூபாய் செலவைத் தவிர்த்திருக்கலாம். 'அப்படிச் செய்யாததால், பொதுப் பணம் வீணாகச் செலவாகி விட்டது. பணம் வராமல் போயிருக்கவும் கூடும். முன்னெச்சரிக்கை யில்லாத செயலால் வீண் பணச்செலவு ஏற்படுத்தியதற்கு ஏன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/503&oldid=787410" இலிருந்து மீள்விக்கப்பட்டது