பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 463 பட்டறிவு, இதைப் பின்னர் எனக்குக் கற்பித்தது. அன்று, அப்பட்டறிவின் அரிச்சுவடியைப் படிக்கத் தொடங்கினேன். என்னுடைய விளக்கம் ஏதோ பெருந்தவறு போலவும், மரியாதைக் குறைவானது போலவும் பேசப்பட்டாலும் அப்படி ஆணை வரவில்லை. என்னுடைய பணியில் சுணங்காமல் செயல்பட்டு வந்தேன். அப்போது, கால்நடையாகவே நடந்து பழகியது, பிற்காலத்தில், இயக்குநராகத் தெருத்தெருவாக நடந்து, பொது மக்களைக் கவர்ந்து, அதைப் பகல் உணவுத்திட்ட உதவியாக முதலாக்கிக் கொடுத்தது. என் பணி தொடர்ந்தது. அக்காலம் எவரும் ஜீப்பை அறியர்ர். பேருந்து சில நகரங்களுக்கே. அக் காலத்தில் பல ஊர்களுக்கு நல்ல வண்டிப் பாதையும் கிடையாது. எடுத்துக்காட்டாக மணிமங்கலம் போவதென்றால் படாத பாடு படவேண்டும். வண்டலூரில் இறங்கிப் போகவேண்டும்; வழியில் முக்கால் பகுதி, சகதியும் சேறுமாக இருக்கும். நடுவில் ஓடைகள்: வாய்க்கால்கள் பல. மாட்டு வண்டி மட்டுமே செல்ல முடியும்; பேருந்து கிடையாது: சேற்றில் ஈருருளியில் எப்படிச் செல்வது? மாட்டு வண்டிக்காரர் எவரும் மணிமங்கலத்திற்கு வாடகைக்கு வரமாட்டார். இரவு அங்கேயே தங்கி, மறுநாள் வரலாம் என்று கூப்பிட்டாலும் பத்து ரூபாய் வாடகை கேட்பார். எட்டுக்குக் குறைந்துவெயில் காலத்திலும் வரமாட்டார். அவ்வளவு கொடுத்தால் கட்டுப்படியாகுமா? காரந்தாங்கல் என்னும் ஊர்வண்டலூருக்கு மூன்று கல் தொலைவில் உள்ளது. அதுவரை சென்று, கணக்குப் பார்க்கும் வேளை காலாறி, பிற்பகல் ஒருவரை அழைத்துக்கொண்டு போனால், மணிமங்கலம் போய்ச் சேர இருட்டிவிடும். அடுத்த நாள், மூட்டை வண்டி ஏதாவது கிடைத்தால், புதையல் கிடைத்த மாதிரியாகும். குன்றத்துருக்கு அப்பால், திருமுடிவாக்கம், பழந்தண்டலம் என்னும் ஊர்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டியுள்ளன. இக்காலத்தில் அவ்வூருக்குப் பேருந்திலேயே போகலாம்: அனகாபுத்துார் வழியாகச் சாலை உண்டு. அப்போது அத்தகைய சாலை இல்லை. குன்றத்துாரில் இறங்கி, வயல் வழியாக, பெரும்பாலும் வரப்பின் மேல் நடந்து செல்ல வேண்டும். வழியில் பல வாய்க்கால்களைக் கடக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/506&oldid=787413" இலிருந்து மீள்விக்கப்பட்டது