பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 நினைவு அலைகள் எப்படி அது இயன்றது? உடல்நலத்திற்கு அடையாளங்கள் எவை? வேளா வேளைக்குப் பசி கிள்ளல்; அப்போதைக்கு அப்போது நீர் வேட்கை ஏற்படல். மனநலத்திற்கு அடையாளம் உண்டா? உண்டு. அது என்ன? சிந்தனை அது குறிக்கோளாக அரும்ப வேண்டும். குறிக்கோளுக் காகப் பாடுபடும் தொண்டாக மலர வேண்டும். தொண்டிலுள்ள பற்று முற்றி முற்றி, வெறியாகக் கனிய வேண்டும். நாட்டுப்புறத்தை விரும்பினேன் நாட்டுப்புறத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். பட்டதாரியான பிறகும் நாட்டுப்புறத்தைக் கண்டு வெறுப்புக் கொள்ளாதவன் நான். 'எனக்குச் சிற்றுார்களின்மேல் ஏற்பட்ட பற்று, என்னுடைய இரண்டாவது இயற்கையாகியிருந்தது. அது என்னைப் பெருமளவு உந்திற்று. எந்த அளவிற்குத் தெரியுமா? வேலையில்லாத பட்டதாரியாக வேலை தேடி அலைந்து கொண்டி ருந்தபோது, அன்றைய திருவிதாங்கூர் இராச்சியத்தில் இருந்த, மார்த்தாண்டம் என்னும் ஊரில் கிராமச் சீரமைப்புப் பணிப்பயிற்சி கொடுக்கும் அமைப்பொன்றை கிறுத்துவக் கழகம் நடத்தி வந்தது. அப்பயிற்சியில் சேர்ந்து கற்க அவாவினேன். அச்செலவிற்கான பணம் என் கையில் இல்லை. என் தந்தையோ, உதவ மறுத்து விட்டார். பிறரிடம் கடன் கேட்டுப் பழக்கமும் இல்லை. காசில்லாக் குறையால் மார்த்தாண்டத்தில் பெற்றிருக்க வேண்டிய பயிற்சி, எனக்கு எட்டவில்லை. அந்த ஏக்கத்தில் இருந்த எனக்கு, சிற்றுார் சீரமைப்புத் துறையில் பணியாற்றும் வகையில் பதவி கிடைத்தது பெருமகிழ்ச்சியை அளித்தது. அதற்காகவே பிறந்திருப்பது போன்ற உணர்வு உந்திற்று. 'நல்லதைச் சாதிக்க வேண்டும்; சாதிக்க முடியும் என்னும் வெறி இந்த வயதிலேயும் என்னை எங்கெங்கோதள்ளிக்கொண்டு போகிறதே! அப்படியிருக்க, இருபத்து மூன்று, இருபத்து நான்கு இளமை துள்ளும் வாலிப வயதில் தொழில், தொண்டாகக் காட்சி அளித்ததில் வியப்பேது? மேலும் அக்காலம் திரும்பிய பக்கமெல்லாம் இலட்சியச் சுடர்கள் பளிர் என்று தென்பட்ட காலம்! எனக்கு எவ்வளவு என்று பங்கு தேடுவோர் மூலையில் கிடந்த காலம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/509&oldid=787417" இலிருந்து மீள்விக்கப்பட்டது