பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவ டிவேலு 469 என் தந்தையின் சினம் ஒரு நாள், சைதாப்பேட்டை பனகல் கட்டடத்தில் இருந்த மாவட்டப் பஞ்சாயத்து அலுவலகத்திற்குச் சென்றேன். அலுவலர் திரு நரசா ரெட்டியார் இருந்தார். அவர் என்னைக் கண்டதும் புதிய இடத்தைப் பற்றிச் சிறிது நேரம் விசாரித்தார். பிறகு, 'உங்கள் தந்தையார் என்னோடு சண்டைக்கு நின்றார். பல முறை அவரைச் சாதுவாகக் கண்டிருக்கிறேன். 'சில நாள்களுக்கு முன்புதான், அவருக்குக் கோபம் வந்தால், எவ்வளவுக்குப் போகுமென்பதைக் கண்டு கொண்டேன். அவருக்கு உங்கள்மேல் இருக்கும் ஆத்திரத்தையெல்லாம் என்மேல் காட்டி விட்டார்' என்று சொன்னார். நான் பதற்றங்கொண்டேன். அவரைத் தொடர்ந்து பேசுவதற்கு விடவில்லை. நான் குறுக்கிட்டு, 'ஏதாவது மரியாதைக் குறைவாகப் பேசிவிட்டாரா, கூறுங்கள். நான் அவரை இங்கே அழைத்து வருகிறேன். மன்னிப்பு கேட்கச் செய்கிறேன்' என்று பொரிந்தேன். 'மரியாதைக் குறைவாகப் பேசவில்லை. உங்கள் பேரில் புகார் கூறினார். உங்கள் அலுவலகம் மாறிய பிறகும் நீங்கள் சென்னையிலேயே குடியிருக்கிறீர்களாம். H. 'திருப்பெரும்பூதுாரில் வேலை பார்க்கிறேனென்று சொல்லிவிட்டுச் சென்னையில் குடியிருப்பது பெருந்தவறு. 'அத்தவறு எப்படி உங்களுக்குத் தெரியாமல் இருக்கிறதோ! இப்போது அதை நானே புகாராக எழுதித் தருகிறேன். விசாரித்து, கடுமையான நடவடிக்கை எடுங்கள்' என்று உங்கள் அப்பா கூறினார். 'நீங்கள், சென்னையில், வேண்டியபோது தங்கலாமென்று கொடுத்திருக்கும் ஆணையைப் படித்துக்காட்டி விளக்கினேன். அதைக் கேட்டதும் அவருக்கு மேலும் கோபம் பொங்கிற்று. 'நீங்கள்தான் அவனைக் கெடுக்கிறீர்களா? அது தெரியாமல் உங்களிடமே புகார் செய்ய வந்தேனே! 'நீங்கள் கொடுக்கும் சலுகையால்தான், அவன் இப்படித் தலைகால் தெரியாமல் இருக்கிறானோ!' என்று அவர் நொந்து கொண்டார். 'உங்கள் பிள்ளை சுந்தரவடிவேலுவைப் போன்ற நல்ல பிள்ளையை இந்தக் காலத்தில் பார்ப்பது அரிது. எவ்விதக் கெட்ட பழக்கமும் கிடையாது; எந்தக் குறையும் கிடையாது. 'உண்மை தவிர வேறொன்றும் தெரியாது. ஒழுக்கத்திற்கு எடுத்துக்காட்டு. அப்படியிருக்க, நீங்கள் ஏதோ கோபத்தில் என்னிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/512&oldid=787421" இலிருந்து மீள்விக்கப்பட்டது