பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 471 அவை செழித்து வளரக் காத்து நின்றதும் அவரே. நீதிக்குப் பெயர் பெற்றவர் என் தந்தை. இருப்பினும் சினங்கொண்டபோது, சீறுவதற்கு எல்லையில்லை என்பதை முதன்முறை உணர்த்தினார். மற்றத் தமிழர்களும் அதே குட்டையில் ஊறினவர்கள்தானே! அன்று நான், உரியவரிடம் உரிய ஆணையைப் பெறாமல் சென்னையில் தங்கியிருந்தால், என் வேலைக்கே தீங்கு நேரிட்டிருக்கலாம். நெறிப்படி நடக்கும் என் இயற்கையைப் பழக்கமாகவும் மாற்றிக் கொண்டதால் அல்லவா, நாற்பது ஆண்டு காலம் அரசு ஊழியம் என்ற செங்குத்தான சறுக்குப்பாதையில் தாக்குப் பிடித்து, முடியைக் கான முடிந்தது! 66. மழையும் காய்ச்சலும்! ஊராட்சித் தலைவர் ஊரிலில்லை பசி வந்திடப் பத்தும் பறந்துபோம். பள்ளிப்பருவத்தில் இதைப் படித்திருக்கிறேன். ஆனால் உணரும் வாய்ப்புக் கிட்டவில்லை. எப்போது, முதன்முறையாக உணர்ந்தேன்? திருப்பெரும்பூதூரில் உதவிப் பஞ்சாயத்து அலுவலனாக அலையும்போது, வேலையில்லாத பட்டதாரியாக ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தபோது கூட, ஒரே வேளைதான் பட்டினி கிடக்க நேர்ந்தது. ஊர் சுற்றி வேலையின்போது, தொடர்ந்து சில வேளை பட்டினி கிடந்து துன்பப்பட்டேன். ஒரு நாள் காலை, திருப்பெரும்பூதூரில் சிற்றுண்டி அருந்தினேன். காலை எட்டு மணிபோல், பேருந்தைப் பிடித்து காஞ்சி செல்லும் வழியில் சென்றேன். சேந்தமங்கலத்திற்கு மேற்கே, கீரனல்லூர் செல்லும் வழியண்டை இறங்கினேன். அப்போது தூறல் தொடங்கிற்று. வழியில் தங்க இடம் இல்லை, குடையைப் பிடித்துக்கொண்டு கீரனல்லூரை நோக்கி நடந்தேன். மண்போட்ட éFIᎢ☾☽ ❍ ; சகதியாக இருந்தது. அதைப் பொருட்படுத்தாது முன்னேறினேன். கீரனல்லூரை நெருங்கும் வேளை, முதியவர் ஒருவர் எதிரில் வந்தார். 'கீரனல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஊரில் இருக்கிறாரா?' என்று கேட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/514&oldid=787423" இலிருந்து மீள்விக்கப்பட்டது