பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474 நினைவு அலைகள் அதன் உட்பொருள் அவ்விளைஞருக்குப் புலப்படவில்லை. மதுரமங்கலம் அஞ்சல் நிலையத்தில் சேமிப்பு வங்கி இருந்தது. எனவே, வந்த பணத்தை அடுத்த நாளே வங்கியில் கட்டியிருக்க வேண்டும். அப்படிச் செய்யாதது, கையாடல் குற்றச்சாட்டிற்கு இடமாகும். இது எனக்குப் பளிச்சென்று தெரிந்தது. தேவரை வழக்கு மன்றத்தில் நிறுத்த நேரிடுமோ என்று அஞ்சினேன். எனவே, பசி காதையடைப் பதையும் பொருட்படுத்தாது, அடுத்து எங்கே போவது என்று சிந்தித்தேன். திருப்பெரும்பூதுாருக்குப் போகும் பேருந்து ஏற்கெனவே போய் விட்டது. அடுத்த நாள் பிற்பகல்தான் மறுவண்டி. ஆகவே, அங்கே காத்திருப்பது வீண் தொல்லை என்று தோன்றியது. சிங்கல்பாடி என்னும் சிற்றுார்ப் பஞ்சாயத்தைப் பார்வையிடலா மென்று கருதினேன். எவ்வளவு தூரம் என்று கேட்டேன். அதிக தூரம் இல்லை. இரண்டு கல் தொலைவுக்குமேல் இராது' என்று அங்கிருந்தவர்கள் கூறினார்கள். அதை நம்பி, சிங்கல்பாடியை நோக்கி நடந்தோம். கொட்டும் மழையில் சில மணித்துளிகளில், மழை; அடைமழையாக மாறியது. வழியோ வரப்புகளின்மேலே. கால்வாய்கள் ஊடே தொலைவோ இரண்டு கற்களுக்கு மேல். படாத பாடு பட்டு விளக்கு வைத்த பிறகு சிங்கல் பாடியைச் சேர்ந்தோம். அவ்வூரில் பஞ்சாயத்துப் பள்ளி ஒன்று உண்டு. அதன் ஆசிரியர், வெளியூரில் குடியிருந்தார். என்னுடைய ஊழியர் பக்கத்துக் குடிசையிலிருந்து பள்ளிக்கூடச் சாவியை வாங்கி வந்தார். பள்ளியைத் திறந்து, இரு பெஞ்சுகளை இணைத்துப் போட்டார். சிங்கல்பாடி, அன்று குடிசையூர். குடிசைகளில் அகல் விளக்குகள் மின்னிக் கொண்டிருந்தன. வெளியே கொட்டும் மழை: பெருங்களைப்புக்கு ஆளான நான், அயர்ந்து உறங்கப் படுத்தேன். 'இரவு உணவுக்கு எழுப்ப வேண்டாம். விடியற் காலை, நாம் யாரென்று அடையாளங் காட்டாமல். ஊருக்குச் சென்று, ஒரு வெண்கலச் செம்பு பால் வாங்கிக் காய்ச்சிக் கொண்டு வா' என்று ஊழியரிடம் சொல்லிவிட்டு உறங்கிவிட்டேன். காய்ச்சல் வந்தது இரவெல்லாம் மழை விட்டுவிட்டுப் பெய்தது. பொழுது விடியத் துக்கம் கலைந்தது. உடம்பு சுட்டது. நல்ல காய்ச்சல் கண்டிருப்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/517&oldid=787426" இலிருந்து மீள்விக்கப்பட்டது