பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480 நினைவு அலைகள் கருத்துடையவர்கள். எனவே, கலப்புத் திருமணத்திற்கு உடன் படுவார்கள். தம்முடன் இந்திய விடுதலைப் போராட்டத்தில் சிறை சென்ற நாயர் ஒருவருடைய மகள் பள்ளியிறுதி வரை படித்திருக்கிறாள். அவரும் முற்போக்குச் சிந்தனையாளர்; கலப்புத் திருமணத்தை விரும்புகிறார். எனவே, தம்முடன் சென்று, அவ்விரு பெண்களையும் பார்த்து, பிடித்தமான பெண்ணைச் சொன்னால், என் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வதாகப் பாரதி நாராயணசாமி கூறினார். கலப்புத் திருமணம், காதல் திருமணமாகவும் இருக்க வேண்டும். மணமகன் மேற்கொள்ள இருக்கும் ஊழியத்திற்குப் பொருத்தமான மனப்போக்கும் பண்பும் உடைய பெண்ணாக மணமகள் இருக்க வேண்டும். என்னைப் போன்றவனுக்கு ஏற்பாடு செய்யும் திருமணம் ஒத்து வருவது அருமை என்று எனக்குத் தோன்றியது. எனவே, அமைதியாகப் பேசி, சமாதானப்படுத்தி, இரு பெண் களுக்கும் வேறு இடத்தில், மாப்பிள்ளை பார்க்கும்படி சொல்லியனுப் பினேன். அதனால், எங்கள் தொடர்போ நட்போ முறியவில்லை; பல்லாண்டு வளர்ந்து: பொது நடவடிக்கைகளுக்குப் பெரிதும் பயன்பட்டது. பாரதி நாராயணசாமியிடம் இருந்த ஒரு போக்கு எனக்குப் பிடித்தது. காந்தியவாதியாக இருந்த அவர், காபி, தேனிர் முதலியன குடிக்கமாட்டாரே என்று அய்யப்பட்டேன். அவர் திருப்பெரும்பூதூர் வந்ததும். 'என்ன பானம் வாங்கிவரச் சொல்ல' என்று கேட்டேன். ‘'எது எளிதில் கிடைக்குமோ அதைக் குடிக்கலாம். காப்பி வேண்டாம், மோர் வேண்டும் என்று அடம் பிடிப்பதன் வழியாக மற்றவர்களுக்குத் தொல்லை கொடுக்க விரும்பவில்லை. 'மதுபானம் தவிர வேறு எது கிடைக்கிறதோ அதைக் குடிப்பேன். பானத்திற்காகச் சிந்தனையையும் நேரத்தையும் அதிகம் செலவிட விரும்பவில்லை' என்றார். இவர் காந்தியடிகள் கட்டளைப்படி, கள்ளுக்கடை மறியல் செய்து சிறை சென்ற பிரம்மச்சாரி என்பதைக் குறிப்பிட வேண்டும். முதல் சொற்பொழிவு பிறர் பேசுவதைக் கேட்டு அறிவு பெற்று வந்த நான், முதன் முதலாக எப்போது பேசத் தொடங்கினேன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/523&oldid=787433" இலிருந்து மீள்விக்கப்பட்டது