பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 நினைவு அலைகள் அவர்களின் உழைப்பால், இந்நாள் முன்னேற்றமடைந்துள்ள நாடுகள் பல, காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ்ந்த அக்காலத்திலேயே பல துறைகளிலும் சிறப்புற்றனையே! இன்று எஞ்சியுள்ள சிறப்பும் நின் புதல்வர்களாகிய விவேகானந்தர், காந்தி, ஜவஹர், போஸ், ராய், ராமன் போன்ற ஆழ்ந்த சிந்தனைக்காரர்களால் அன்றோ நிலைத்திருக்கிறது. ஒய்வு உறக்கமின்றிச் சதா சொன்மாரி பொழியும் தேசாபிமானி களால், சீர்திருத்தவாதிகளால் அல்லவே! நின் பிந்திய புதல்வர்கள் அவ்வருங் குணங்களைக் கைவிட்டனர். வீண்பெருமையிலும், களியிலும், சுவைக்கு உதவா அற்ப காரியங்களிலும் தங்கள் மகத்தான ஜீவசக்தியைத்துள்துள்ளாய் பொடிப் பொடியாய்ச் சிதறவிட்டனர். நின் வீழ்ச்சிக்கு அடிகோலினர். சக்தி செத்துப் போய்விடவே நின் சீரும் அழிந்துபோயிற்று. பிற நாட்டினரின் மதிப்பும் மறைந்து போயிற்று. நீ பிற நாட்டினர் முகத்தில் விழிக்கவும் வெட்கித் தலைகுனிந்து செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. அன்று பளிச் பளிச்சென்று கண்ணைப் பறிக்கும் ஒளியையும் இன்று நினைக்கக்கூட முடியாத வேலைப்பாடும் அமைந்த சேலையுடுத்தி உலவினாய். இன்றோ காலச் சுழற்சியால், பொலிவிழந்து, மங்கி, கிழிந்த அதே சேலையைப் பல ஒட்டுகளுடன் கட்டிக்கொள்ள வேண்டிய கதி வந்துவிட்டதே! ஒவ்வொரு தையலும் ஒரு காலத்தில் அச்சேலை மிக அழகுடன் விளங்கியதையும் அதைப் போன்ற பல அழகிய உடைகள் நின் தேகத்தைப் பெற்ற பண்டைச் சீரையும், தற்கால எளிமையையும் நினக்குக் காட்டுகின்றவோ? அதனால்தான் நீ வெட்கித் தலைகுனிகின்றனையோ? நின் மனம் எத்தனை பாடுபடுகின்றதோ? என்ன என்னவெல்லாம் நினைத்துருகுகிறதோ ஆ நின் கண்கள் எத்தனை ஆற்றுப் பெருக்கை உகுக்கின்றனவோ! அவர்கள் வழிவந்த நாங்களோ, ஒயா வாயாடிகளாய் விட்டோம். தாழ்வைக் கருதாக் கயவர்களாகிவிட்டோம். மண்ணில் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின் மாண்பினையிழந்தோம். களியிலும், வீண் வாதத்திலும் அற்ப விஷயங்களிலும் சக்திகளைச் சிதறவிட்டோம். எங்களுக்கு ஆழ்ந்த யோசனை, சலியா உழைப்பு முதலியன குதிரைக் கொம்பாகி விட்டன. உருப்படியான நிர்மாண வேலைக்கு லாயக்கற்றவர்களாய்ப் பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வேடிக்கை மனிதர்களானோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/527&oldid=787437" இலிருந்து மீள்விக்கப்பட்டது