பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 485 உன் நலத்தை அடியோடு மறந்து விடவில்லை. நின் சுதந்திரத்திற்காக எண்ணிறந்த மகாநாடுகள் கூட்டினோம். வீராவேசத்துடன் நீண்ட சொன்மாரிகள் பொழிந்தோம். சுவையற்ற திட்டங்கள் வகுத்தோம். சாதிமத பேதத்தை யறுக்க எவ்வளவு அழகிய உருக்கமான பிரசங்கங்கள் - வழிகள் இந்தியனின் வறுமையைக் களைய எத்தனை பொருளாதாரத் திட்டங்கள் செய்தோம்! எத்தனை விதக் கிராமச் சீர்திருத்த முறைகள்! அடைந்த உருப்படியான பலன் என்ன? வெகு வெகு சொற்பமே. ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவுமோ? எத்திட்டம் சிறந்தது எனும் வாதப் போரிலேயே எங்கள் சக்தியெல்லாம் சிதறிப் போயிற்றே. பஞ்சிற் பற்றிய தீ பொஸ் என்று கணநேரத்தில் எரிந்து தணிந்து விடுவதைப் போல் நிர்மாண வேலை எங்கிருக்கிறது! நாட்டில் வகுக்கப்படும் எண்ணிறந்த திட்டங்களையும், கோலும் வழிகளையும் கவனித்தால் தேச முன்னேற்றத்தைவிடத் தாங்கள் ஒரு பெரிய திட்டத்தை வகுத்த பெரியோர்களாகக் கருதப்பட வேண்டு மென்ற எண்ணமே தலைசிறந்து விளங்குவதாய் ஐயமேற்படுகிறதே. எல்லாரும் பேசாமடந்தைகளாக வேண்டும் என்பதல்ல என்கருத்து. தமது கருத்துகளையும், உள்ளக் கிடக்கைகளையும் மற்றவர்களின் மனத்திற் பதிய வைக்கப் பேச்சு தெளிவாக மனத்திற் தைக்கக்கூடிய பேச்சுப் பழக்கம் மிகமிக அவசியமே. சபைக் கோழையைப் போன்ற பரிதாபகரமான பிராணி உலகத்திலேயே வேறு இல்லை. வீண் வெற்றுரை வீரனைப் போன்ற வெறுக்கத்தக்க பிராணியும் இல்லை. ஆகவே, பேச்சு கட்டுப்பாட்டிற்கு அடங்கியதாய், தக்க சமயத்தில் உதவுவதாய் இருக்க வேண்டும். அளவிற்கு மேற்பட்டதாய் - அனாவசியமாயிருத்தலாகாது. நாங்கள், பொதுவாக மூன்று பிரிவுகளில் கட்டுண்டு கிடக்கிறோம். முதற் பிரிவு, பேச்சு வீரர்களை, பாட்டு வீரர்களை, நிர்மாண வேலைக்கு லாயக்கற்றவர்களைக் கொண்டது. இரண்டாம் பிரிவினர் அவர் என்ன அருமையாகப் பேசினார் என்று கூறிவிட்டு, அத்துடன் காரியத்தை மறந்து விடுபவர்கள். நாட்டைப் பற்றியோ பொது விஷயங்களைப் பற்றியோ கவலைப்படாத அசிரத்தையாளர்கள், எது எக்கேடு கெட்டாலென்ன" என்று இருப்பவர்கள், மூன்றாம் பிரிவினர். இப்பிரிவுகளுக்கப்பால் கர்மயோகிகளாய் செயலாற்றுபவர்களாய் -உண்மைத் தேசபக்தர்களாய்-சீர்திருத்தவாதிகளாய் நின்புதல்வர்களில் பதினாயிரத்தில், லட்சத்தில், இல்லை கோடியில் ஒருவர்தான் உள்ளார். இதனாலன்றோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/528&oldid=787438" இலிருந்து மீள்விக்கப்பட்டது