பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ து. சுந்தரவடிவே o! 11 - - இப்போது மட்டுமா தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று? இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பும் யாரோ செய்யாமற் செய்த உதவியால் நீ உயிர் பிழைத்தாய்! அரியலூரில் கவிழ்ந்த விரைவு இரயிலில் அல்லவா முதலில் இடம் பிடித்திருந்தாய் அவ்வண்டியில் போயிருந்தால் அன்றே முடிந்திருக்கும் உன் கதை. ஒரே மகன், அருமைச் செல்வன், இரக்கத்தின் திருவுருவம் ஆகிய திருவள்ளுவனை இழந்து அனாதையாகத் தவிக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. அரியலூரில் நொடியில் மறைந்திருப்பாய். ஆளுநர் ரீபிரகாசாவிற்குச் சென்னை மாநகரப் பெருமக்கள் பிரிவுபசார விழாவிற்கு ஏற்பாடு செய்தார்கள். அதிற் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, திருநெல்வேலி மாவட்ட நிகழ்ச்சிகளை மூன்று நான்கு நாள்கள் முன்னதாக நகர்த்தினாய். முன்னர் திட்டமிட்ட இரயிலில் சென்று கவிழாமல், வேறு இரயிலில் சென்று, உயிரோடு திரும்பிவிட்டாய். இதிலே உன் திறமை எங்கே இருந்தது. ஏதோ ஒரு 'சாக்கு உன்னைக் காப்பாற்றியது. அதனால், உன் தந்தையை இழந்து தவிக்கையில், மூத்த மகனானாலும் வேறு சாதியில் திருமணம் செய்து கொண்டவன் எரியூட்டக்கூடாது' என்று மூத்த உறவினர் தடுத்ததற்கு எதிர்க்குரல் எழுப்பாமல் அக்கொடுமை யைப் பொறுத்துக் கொள்ளும் அவல அனுபவம் உன்னை அனைத்துக் கொண்டது. 'பொதுக்கல்வி இயக்குநரான பிறகு வந்த ஆபத்து இருக்கட்டும். வாழ்க்கையின் தொடக்கத்தில் மலைபோல் வந்த ஆபத்து பனிபோல் போனதும் நினைவிலிருக்கட்டும். பொன்னேரியில் கல்வித்துறையின் சிறு தொண்டனாக கீழ்நிலைப் பள்ளித் துணை ஆய்வாளனாக இருந்தபோது, உன் திறமையாலா ஆரணியாற்று வெள்ளத்தில் ஆற்றோடு போகாமல் உயிர் பிழைத்தாய்? முன்னே இருந்த ஆய்வாளர். இரண்டு மூன்று மாதங்களாகத் தணிக்கை செய்யாமல் பாக்கிவிட்ட பள்ளிகளையும் ஒரே திங்களில் கணிக்கை செய்துவிட வேண்டுமென்ற வெறியில், அனுப்பம்பட்டு தொடக்கப் பள்ளியிலிருந்து மாலை ஐந்துமணிக்குக் காட்டுரை நோக்கி கடந்தது மறந்து போயிற்றா? கொட்டும் மழையில் ஆரணியாற்றைக்கடக்கும்போது, இடுப்பளவு வெள்ளத்தில் நடக்கும்போது, சட்டென்று பள்ளத்தில் விழவும் கழுத்தளவு தண்ணிரின் ஒட்டத்தைச் சமாளிக்க முடியாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/53&oldid=787441" இலிருந்து மீள்விக்கப்பட்டது