பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 487 முதன்முறை சிறுகளத்துருக்குச் சென்றபோது மணியக்காரரைத் தேடிச் சென்றேன். அவ்வூரில் சாதி இந்துக்கள் ஒரு தெருவில் குடியிருந்தார்கள். இருபது வீடுகளுக்கு மேலிராது. சைவ முதலியார் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அவர், என் பதவியைப் பற்றிக் கேள்விப்பட்டதும், அன்பாக வரவேற்று உபசரித்தார். 'ஊராட்சித் தலைவர் வீடு ஒரு கல் தொலைவுக்கு மேல் இருக்கும். இருக்கிறாரா என்று பார்த்துவரச் சொல்லுகிறேன்' என்று கூறி ஆளை அனுப்பினார். போனவர், வரவு செலவுக் கணக்கு, கூட்டக் குறிப்பேடு ஆகியவற்றுடன் வந்து சேர்ந்தார். தலைவர் அடையாறு சென்றிருப்பதாகச் சொன்னார். கணக்குகளைப் பார்த்தேன்; ஒழுங்காக இருந்தன. கையெழுத் திட்டேன். பிறகு, முதலியார் சொன்னார்: "நாகரத்தினம் பத்தாவது வரை படித்தவர். சிறுசிறு ஏரி, கட்டட வேலைகளை ஒப்பந்தம் எடுத்துத் தொழில் புரிந்து வாழ்கிறார். கை சுத்தம் வாய் சுத்தம் உடையவர்; ஆதிதிராவிடர் இவ்வூர்க் குடியிருப்புப் பெரியது இருநூறு வீடுகள் இருக்கும். 'முதலில் நான் ஊராட்சித் தலைவராக இருந்தேன். நாகரத்தினம் முன்னுக்கு வந்ததும், நானே கூப்பிட்டு, அவரைத் தலைவராக்கி விட்டேன். "அத்தனை வீட்டுக்காரர் இருக்கையில், அவர்கள் பொறுப்பேற்பதே சரி. அதுவும் படித்த நல்ல பிள்ளை இருக்கையில், நாமாக விட்டு விட்டால் அவர்களும் நம்மை மதிப்பார்கள்' என்றார். அப்பெரியவர் மணஞ்சேரி கந்தசாமி முதலியாரின் உறவினர். அவருடைய தெளிவைப் போற்றினேன். == சிறுகளத்தூர் குடியிருப்பில், மாவட்ட ஆட்சிக்குழுவின் தொடக்கப் பள்ளியொன்று இருந்தது. அதைப் பார்வையிடும் சாக்கில் அங்கே சில முறை சென்றிருக்கிறேன். சிலவேளை திரு. நாகரத்தினம் அங்கு வந்து என்னைக் கண்டது உண்டு. அப்போதும் அவர் எனக்குக் 'காபி கொடுக்கத் துணிந்ததில்லை. யாரிடமும் எதையும் கேட்க நாவு எழாத நான், அவரிடம் மட்டும் எப்படிக் கேட்பேன்? எப்போது போனாலும் சிறுகளத்துரில் முதலியார் வீட்டில்தான் எனக்குச் சாப்பாடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/530&oldid=787442" இலிருந்து மீள்விக்கப்பட்டது