பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494 நினைவு அலைகள் ஏன்? பிரிட்டானியப் பேரரசும் மதிப்பிடப்படும். இலக்கியம் பற்றியும் அடிக்கடி உரையாடுவோம். திரு கதிர்வேலு பழுத்த பகுத்தறிவு வாதி; உள்ளம் உறுதி மிகுந்தவர்: படாடோபமற்ற வாழ்க்கை வாழ்ந்தவர். பெண்ணுரிமை பேணியவர். தமிழிலக்கியத்தில் புலமை உடையவர். தமது ஒரே மகள் மணிமேகலையைப் படிக்க வைத்து ஆசிரியை ஆக்கியவர். பிற்காலத்தில் அவர் மறைந்தபோது, மணிமேகலை தன்னந்தனியே கன்னியாக நின்றுவிட்டாள். 'நெ.து. சுந்தரவடி வேலுவிடம் சொல்; அவர் மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் செய்து வைப்பார் என்றாராம். நான் நிறைவேற்றவில்லை. 'சங்க காலத்தில் புனைந்துரை குறைவு: கட்டுக் கதைகள் மலிந்த பிற்கால இலக்கியம் தமிழையும் தமிழரையும் கெடுத்தது என்பது அவருடைய அழுத்தமான் முடிவு. இது பற்றிய உரையாடலில் கதிர்வேலுவும் இராமலிங்கமும் அதிகம் பங்குபெறுவர். நானும் மரியண்ணாவும் சிற்சில வேளையே நுழைவோம். இவ்வுரையாடலில், என்னைத் தமிழ்ப் புலவர் சான்றிதழுக்குப் படிக்கும்படி கதிர்வேலு ஆலோசனை கூறினார். 'வீட்டிலிருந்தபடியே படிக்கலாம். நானும் அவ்வப்போது பாடம் சொல்லிக் கொடுக்கிறேன்' என்று இராமலிங்கம் ஊக்கப்படுத்தினார். திங்கள்தோறும் இருபது நாள்கள் வெளியூர் செல்ல வேண்டிய அலுவலில் உள்ள என்னால், புலவர் தேர்வுக்கு ஆயத்தம் செய்ய முடியுமா என்று சற்றுத் தயங்கினேன். இருவரும் அடிக்கடி தூண்டியதால், அது எனக்கு அறைகூவலாக அமைந்துவிட்டது. எனவே, சென்னைப் பல்கலைக்கழக வித்வான் (புலவர்) தேர்வுக்கான பாடத்திட்டத்தை விசாரித்துச்சொல்லும்படியும் அதற்கான நூல்களை விலைக்கு வாங்கித் தரும்படியும் சொல்லி அப்பொறுப்பைத் திரு இராமலிங்கத்திடம் ஒப்படைத்தேன். அப்போது சென்னைப் பல்கலைக்கழகத்தைப் பொதுமக்கள் அண்ட முடியாது. அங்கே தகவல் நிலையம் இல்லை. வேண்டியவர்கள் இருந்தால்தான் சாதாரணமான தகவலும் கிடைக்கும். எனவே, பாடத் திட்டத்தைக் கேட்டு அறிந்து வரவே கால தாமதம் ஆகியது. அதில் கண்ட பல நூல்கள் விலைக்குக் கிடைக்கா என்ற அவலச் செய்தியைக் கொண்டு வந்தார். கிடைக்காததைப் படிக்க வைக்கவே பல்கலைக்கழகங்கள், இது அப்போது தெரியாது. கிடைக்கக்கூடிய சில நூல்களையாவது வாங்கிப் படிக்கத் தொடங்கி விடுவதென்று முடிவு செய்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/537&oldid=787458" இலிருந்து மீள்விக்கப்பட்டது