பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 495 அவ்வேளை நிகழ்ந்த புற நிகழ்ச்சிகள் சில ஒய்வைக் கெடுத்தன. என்னை இடம் பெயரச் செய்தன. புது வழி தேடச் செய்தன. எனவே, தனியாகப் படித்து, புலவர் பட்டம் பெற வேண்டுமென்னும் என் அவா, சிதைவுற்றது. இப்போது அந்நிகழ்ச்சிகளுக்குச் செல்வோம் கண்டிப்பானவர் என்பதற்காகக் கழித்துக் கட்டுவதா? 1937ஆம் ஆண்டு நடந்த சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி பெரும்பான்மையான இடங்களைப் பிடித்தது. சிறிது கால தாமதத்திற்குப்பின் திரு சக்கரவர்த்தி இராசகோபாலாச் சாரியார் தலைமையில் அமைச்சரவை உருவாயிற்று. திரு பெ. கோபால் ரெட்டியார் உள்ளாட்சித்துறை அமைச்சரானார். அப்போது ஒவ்வோர் அமைச்சருக்கும் ஒரு பேரவைச் செயலர் உண்டு. திரு ரெட்டியாருக்கு திரு மீ. பக்தவத்சலம் பேரவைச் செயலராக இருந்தார். வார முடிவில், திரு பக்தவத்சலம் வீட்டிற்குச் சென்று, அவருடைய மைத்துனரும் என் இனிய நண்பருமான திரு தி.கோ. சீனிவாசனைக் கண்டு அளவளாவுவது என்னுடைய பொழுது போக்குகளில் ஒன்று. திருப்பெரும்பூதுரில் பணியாற்றிய போதும் அப்பழக்கம் தொடர்ந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை சீனிவாசனைத் தேடிக் கொண்டு திரு பக்தவத்சலம் வீட்டிற்குள் நுழைந்தேன். அங்கு, திரு பக்தவத்சலம் சாய்மான நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். நான் வனங்கினேன். 'உங்களுக்கு ஒரு செய்தி இருக்கிறது. அமருங்கள்' என்றார். உட்கார்ந்தேன். திரு பகத்வத்சலம் அவிழ்த்துவிட்ட செய்தி என்ன? 'உடுமலைப்பேட்டை நகராட்சி மன்றம் காங்கிரசு அரசின் நடவடிக்கையைக் கண்டித்துத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றியுள்ளது. 'எனவே, அதைச் சிறிது காலத்திற்குக் கலைப்பதென்று முடிவு செய்துள்ளோம். அப்படிக் கலைக்கும்போது, ஒரு தனி அலுவலரின் பொறுப்பில் அதைவிட வேண்டும். 'இப்போது அங்கிருக்கும் ஆணையர், நகரசபைத் தலைவர், கனகராஜூவுக்கு வேண்டியவர். அவரைத்தனி அலுவலராக நியமிப்பது. கனகராஜூவிடம் தனிப்பொறுப்பில் நகரசபையை ஒப்படைப்பதற்குச் சமமாகும். எனவே, வெளியார் ஒருவரை நியமிக்கக் கருதினோம். 'உதவிப் பஞ்சாயத்து அலுவலர்களில், பதவி உயர்வுக்கு ஏற்றவர் எவராவது இருந்தால், அவரைப் பற்றிய தகவலை அனுப்பும்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/538&oldid=787459" இலிருந்து மீள்விக்கப்பட்டது