பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496 நினைவு அலைகள் உள்ளாட்சி மன்றத் தலைமை ஆய்வாளரைக் கேட்டோம். பணிமூப்பு அடிப்படையில் மட்டும் அல்லாது திறமை அடிப்படையில் பரிந்துரை கேட்டு இருந்தோம். 'அவர் - திரு எஸ். அரங்கநாதன் ஐ.சி.எஸ். உங்கள் பெயரை அனுப்பினார். மாகாணத்திலுள்ள எல்லா உதவிப் பஞ்சாயத்து அலுவலர்களிலும் நீங்கள் திறமையானவர், நேர்மையானவர் என்று எழுதியுள்ளார். 'எனவே, உங்களை உடுமலைப்பேட்டைக்குத் தனி அலுவலராக நியமிக்கலாமென்று, அலுவலகத்தில் இருந்து குறிப்பு வந்தது. 'அமைச்சர் திரு கோபால் ரெட்டியாரும் ஏற்றுக்கொண்டு, கையெழுத்திட்டு விட்டார். கோப்பைக் கீழே அனுப்புவதற்கு முன், என்னிடம் அத்தகவலைச் சொன்னார். நான் தலையிட்டேன். 'சுந்தரவடிவேலு எங்கள் ஆள்; எனக்கு மிக வேண்டியவர். அவருக்குப் பதவி உயர்வு கிடைப்பது, எனக்குத்தான் அதிக மகிழ்ச்சி. 'அவர் திறமையானவர், நேர்மையானவர் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. உடுமலைப் பேட்டையில் காங்கிரசாருக்கும் நீதிக்கட்சியாருக்கும் கடுமையான போட்டி. 'நீதிக்கட்சிக் கோட்டையாகிய உடுமலைப் பேட்டை நகராட் சியைக் கலைத்தது போதாது. அடுத்து வரும் தேர்தலில் அதை நம் கட்சி கைப்பற்ற வேண்டும். அதற்குக் கட்சிக்குச் சாய்ந்து கொடுக்கக் கூடிய ஒருவர் தேவை. 'சுந்தரவடிவேலு விதிமுறைகளைப் பின்பற்றுவதில் கண்டிப் பானவர்; மனச்சாட்சிக்கு மாறாகச் சிறு செயலும் செய்ய மாட்டார். ஆகவே வளைந்து கொடுத்து, உள்ளுர்ப் பெரும்புள்ளிகளைக் காங்கிரசின் பக்கம் இழுக்கக்கூடிய ஒருவரைத் தேடி நியமிக்க வேண்டும். உங்கள் ஆணையை நிறுத்திவிடுங்கள்' என்று அமைச்சருக்குச் சொன்னேன். 'உங்களைத் தேடி வந்த பதவி, என்னால் பறிபோய் விட்டது. சண்டைக் களமாகிய உடுமலைப்பேட்டைக்கு நீங்கள் போவது நல்லதல்ல என்றுதான் நான் நிறுத்திவிட்டேன்' என்று திரு பக்தவத்சலம் கூறினார். தலையில் இடி விழுந்ததுபோல் இருந்தது. உடுமலைப் பேட்டையில் பதவி, ஆணையர் பதவிகளில் கடைநிலை. ஊதியம் ரூபாய் நூறே. அது கூடத் தட்டிவிடப்பட்டது. அதற்குச் சொன்ன காரணம், வாழ்நாள் முழுவதும் இடையூறாக வந்து நிற்குமே! இழுத்த இழுப்புக்குப் போகும் பக்குவம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/539&oldid=787460" இலிருந்து மீள்விக்கப்பட்டது