பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 497 வராவிட்டால், அப்போது இருந்த சிறு வேலையிலேயே காலந் தள்ள நேர்ந்துவிடுமே! பச்சோந்திப் பக்குவம் எப்படி வரும்? எப்போது வரும்? இப்படிச் சிந்தனை துடித்தது சில மணித்துளிகள். அகத்தின் துடிப்பை முகத்தில் காட்டாமல் சமாளித்தேன். நண்பர் வெகுண்டார் பின்னர், உள்ளே சென்று சீனிவாசனோடு உரையாடினேன். வழக்கம்போல் அங்கேயே பகல் உணவு உண்டேன். என்னை வழியனுப்பப் பேருந்து நிலையத்திற்கு வந்தபோதுதான், என் நண்பர் சீனிவாசனிடம் அவர் மைத்துனர் செய்த கெடுதியைக் கூறினேன். வெகுளாமல் இயந்திரம்போல் பேசினேன். ஆனால் சீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார்; ஆத்திரங் கொண்டார். அவரை அமைதிப்படுத்தி, திரு பகத்வத்சலத்தை மேலும் ஆத்திரமூட்டி விடவேண்டாமென்று வேண்டினேன். பல வாரங்கள் கழிந்தன. அக்காலத்தில், திருவள்ளுர் நகராட்சியல்ல; பேரூர் ஆட்சியாக இருந்தது. அதையும் கலைத்து அதற்குத் தனி அலுவலர் போடப் போவதாகப் பேச்சு எழுந்தது. அந்த அலுவலருக்கு ஊதியம் திங்களுக்கு எழுபத்தைந்து ரூபாய்களே. அச்சிறிய வேலைக்காவது உதவுவார் என்று எண்ணி, திரு பக்தவத்சலத்தை நாடினேன். என் கோரிக்கையைப் பொறுமையாகக் கேட்டார். ஆனால் அவர் பழைய போக்கிலிருந்து சிறிதும் மாறவில்லை. திருவள்ளுர் வேலையும் எனக்கு ஒத்துவராது என்று சொல்லிவிட்டார். 'திறமைக்கும் நேர்மைக்கும் இங்கு இடமில்லையா?' என்று கேட்க வேண்டும்போல் இருந்தது. எவ்வளவு பெரிய அதிகாரத்திற்கும் மண்டியிடாத இயல்பைப் பெற்றிருந்ததைப்போல், எவரிடமும் கடுமையாகப் பேசாத போக்கையும் கொண்டிருந்தேன் நான். எனவே, நெஞ்சில் நெருப்பைக் கட்டிக்கொண்டு, வாய் பேசாமல் ஊமையாகவே இருந்து விட்டேன். இவ்விரு தோல்விகளும் எனக்குக் கற்றுத் தந்த பாடம் என்ன? நேர்மையைக் காட்டியே, வளைந்து கொடுக்கமாட்டார் என்பதைச் சொல்லியே, என்னை ஒதுக்கி வைத்துக்கொண்டே வருவார் திரு. பக்தவத்சலம் என்பதாகும். அவருடைய போக்கு எனக்குத் தெளிவாகத் தெரியும். எனவே அவர் வேறு உயர்ந்த பொறுப்புக்குப் போகட்டும் என்று காத்திருந்து பயன் இல்லை என்பது தெளிவாயிற்று. எப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/540&oldid=787465" இலிருந்து மீள்விக்கப்பட்டது