பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 நினைவு அலைகள் உள்ளாட்சித் துறை அலுவல் வளையத்தில் இருந்து தப்புவது என்பதே கவலையாயிற்று. ஆசிரியர் பயிற்சிக்குச் செல்ல முடிவு சில நாள் கவலைக்குப்பின், வழி ஒன்று மின்னிற்று. அது என்ன? ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து பயிற்சியும் பட்டமும் பெறுவது; பின்னர் ஆசிரியராகப் போய் விடுவது. நேர்மையாளனுக்கு அங்கேதான் இடம் மறுக்கப்படாது என்று அப்போது எனக்குத் தோன்றிற்று. நண்பர் கதிர்வேலுவிடம் தனியாக இதைச் சொன்னேன். ஆசிரியர் பணியில் சேர்வதற்கு உச்ச வயது முப்பது, இப்போது உனக்கு இருபத்தைந்து. எனவே, அய்ந்தாண்டுத் தவணை கிடைக்கும். இப்போது தொழிலில் தேக்கம் இருந்தாலும் அய்ந்தாண்டுகளில் எப்படியும் வேலை கிடைத்து விடும். 'மனச்சான்றுப்படி, பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டு, நம் அறிவையும் வளர்த்துக் கொள்ளலாம். ஆகவே, தயங்காது உரிய நேரத்தில் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு மனுப் போட்டுவிடு' என்று கதிர்வேலு அறிவுரை கூறினார். அக்கால கட்டத்தில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இடம் பிடிப்பதும் கடினம். இடத்திற்கு விண்ணப்பம் போடுவோர். ஏதாவது ஒர் உயர்நிலைப்பள்ளியின் பரிந்துரையையும் உறுதிமொழியையும் பெற்றுத் தரவேண்டும். என்ன உறுதிமொழி, விண்ணப்பதாரரின் பணி, தங்கள் பள்ளிக்குத் தேவைப்படுவதால், அவர் பயிற்சி பெற்றுவந்ததும் அவரை தங்கள் பள்ளியில் ஆசிரியராக நியமிக்க ஒப்புக் கொள்ளுகிறோமென்று உறுதிமொழி கொடுக்க வேண்டும். எவரிடம் அத்தகைய உறுதிமொழியைப் பெறுவது? திரு சா. குருசாமி அவர்களை அணுகினேன். அவர் தியாகராய நகரில் திரு. சி.தெ. நாயகம் அவர்களிடம் என்னை அழைத்துப் போனார். 71. நீதிக்கட்சித் தலைவர் செ.தெ.நாயகம் செ.தெ. நாயகம் செய்த உதவி திருவாளர் செ.தெ. நாயகம், நண்பர் குருசாமியையும் என்னையும் அன்போடு வரவேற்றார். எது பற்றி வந்துள்ளீர்கள் என்று வினவினார். திரு. குருசாமி என்னைச் சுட்டிக்காட்டி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/541&oldid=787467" இலிருந்து மீள்விக்கப்பட்டது