பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 501 7-10-1878 இல் பிறந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். இளமைப் பருவத்திலேயே சமுதாயக் கண்ணோட்டம் பெற்றுவிட்ட திரு தெய்வநாயகம், சென்னை, முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், நீதிக்கட்சியின் தொடக்கத்திலே பங்குகொண்டார். எல்லோரும் ஒர் நிறை என்னும் சமத்துவக் கொள்கையை உறுதியாகக் கடைப்பிடித்தார். தாழ்த்தப்பட்டவர், பின் தங்கியவர் நலனுக்காகப் பாடுபட்டார். நீதிக்கட்சியின் ஆங்கில நாளிதழாகிய ஜஸ்டிஸ்'சின் வளர்ச்சிக்கு உழைத்தார். பெண்கள் சமத்துவத்தைச் செயல்படுத்துவதில் பாடுபட்டார். தமது இரு மகன்களையும் மூன்று மகள்களையும் பட்டதாரிகளாக்கினார். இவ்விவரங்களைத் திரு. குருசாமி சொல்லிக் கொண்டு வருகையிலே, என்துடிப்பு அதிகம் ஆயிற்று. 'தமிழர் குடும்ப நலனை எப்படிக் காக்க வேண்டுமென்று, வழிகாட்டிய அவர் அரசு ஊழியத்தில் எப்படிப் போய்ச் சேர்ந்தார்' என்று தெரிந்து கொள்ளத் துடித்தேன். 'வகுப்புரிமைக்குப் போராடிய நீதிக்கட்சி செல்வாக்குப் பெற்ற போது, கூட்டுறவுத் துறையில் நேரடியாகத் துணைப்பதிவாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சூழல் உருவாயிற்று. திரு நாயகம் துணைப் பதிவாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று குருசாமி கூறினார். திரு நாயகம், அப்படி நியமிக்கப்பட்டதால், முன்னணியில் இருந்த பிரிவனருக்கு அவர் மேல் எரிச்சல். எப்போது பார்த்தாலும் அவர்மேல் குற்றம் சாட்டுவதிலேயே எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் முனைப்பாக வேலை செய்துகொண்டு இருந்தார்கள். 'ஒரு தடவை, சென்னைச் சட்டமன்றத்தில் திரு நாயகத்தையும் மற்றோர் அரசின் அதிகாரியையும் பெயர் சொல்லிக் குற்றஞ் சாட்டும் நிகழ்ச்சி நடந்தது. என்ன குற்றச்சாட்டு? 'அவ்விருவரும் பொதுத் தேர்தலின்போது, நீதிக்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகப் பணியாற்றினார்கள் என்பது குற்றச்சாட்டு. "அதைப்பற்றி விசாரணை செய்ய அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமென்பது கோரிக்கை. ' ஆட்சியாளர்கள் அதற்கு என்ன நிலை எடுத்தார்கள்? ஆட்சியில் இருந்த நீதிக்கட்சியின்சார்பில், திரு ஆற்காடு இராமசாமி முதலியார் பேசினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/544&oldid=787473" இலிருந்து மீள்விக்கப்பட்டது