பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504 நினைவு அலைகள் துரயவர் செ.தெ. நாயகத்தின் கல்விப் பணி ஆல்போல் தழைத்து இருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அப்பெரியவரின் நூற்றாண்டு நிறைவு விழா 1978 அக்டோபரில் வந்தது. நல்லாசிரியர் நமச்சிவாயரை மறந்ததுபோல நாயகத்தையும் தமிழர்கள் மறந்துவிட்டார்கள். எத்தனை பெரிய சான்றோரை, தமிழ்த் தொண்டரை மறந்து விட்டோம். மறப்போம்! தமிழர் மறந்தார் என்பதை மறப்போம்! "சான்றோராம் செ.தெ. நாயகத்தை மறந்தார் என்பதை மறப்போம்! இந்தித் திணிப்பின் எதிர்ப்புப் போருக்கு, முதல் அணித் தலைவராக விளங்கியவரை மறந்ததை மறப்போம்! இனி என் கதைக்குப் போவோம். ஏன்? தமிழன் என்பதற்கு அடையாளம் எது? ஆதியும் அந்தமும் தான்' என்னும் முனைப்பே 72. தன் கையே தனக்கு உதவி தந்தையின் அதிர்ச்சி திரு. செட்டிகுளம் தெய்வநாயகத்திடம் பரிந்துரையும் ஏற்பு உறுதி மொழியும் பெற்ற நான், உரிய நேரத்தில் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி விட்டேன்; பதிலுக்குக் காத்துக்கிடந்தேன். இதற்கிடையில், ஊராட்சித் துறை அலுவலை விட்டுவிட்டு, கல்வித்துறையில் நுழைய நான் முயல்வதைப் பற்றி என்தந்தையாரிடம் கூறினேன். அவர் அதிர்ச்சியடைந்தார். நான் எந்தத் திருமண ஏற்பாட்டிற்கும் செவிசாய்க்காதிருப்பதைப் பற்றி எரிச்சல் கொண்டிருந்த அவருக்கு அச்செய்தி ஆத்திரமூட்டியது. கடுஞ்சொற்களைக் கையாளவில்லையே ஒழிய, அம் மாற்றத்தை அவர் கடுமையாக எதிர்த்தார். இப்படி, ஒன்றிலிருந்து ஒன்றிற்கு உருண்டு கொண்டிருக்கும் போக்கு என் தந்தைக்குப் பிடிக்கவில்லை. ஆசிரியர்களுக்கு அந்தக் காலத்தில் கிராக்கி கிடையாது. ஊதியமும் கட்டை, அலுவலருக்கு உள்ள மதிப்பு ஆசிரியருக்குக் கிடையாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/547&oldid=787477" இலிருந்து மீள்விக்கப்பட்டது