பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு تقيقة فقطة இவற்றை மனத்தில் கொண்டு, ஆசிரியர் பயிற்சிக்குப் போக வேண்டாம் என்று தந்தை தடுத்தார். இருக்கும் வேலை பிடிக்காவிட்டால் அல்லது அதில் பதவி உயர்வுக்கு வாய்ப்பு இல்லாவிட்டால் கவலைப் படத் தேவையில்லை: குடும்பத்தின் பயிர்த்தொழில், உள்ளுர் நெல் வாணிபம் ஆகியவற்றைக் கவனித்தால் நிறையச் சம்பாதிக்காலம் என்றும் எனக்கு ஆசைகாட்டிப் பாாததாா. பிழைக்கத் தெரியாத இப் பிள்ளைக்கு இளமையிலேயே பனப்பற்று ஊன்றாமலே போய்விட்டது. என்மேல் வெகுண்ட தந்தையார், சில திங்கள் என்னோடு முகம் கொடுத்துப் பேசாமலே இருந்தார். நான் கசப்புக் கொள்ள மறுத்துவிட்டு, என் வேலையைக் கவனித்தேன். ஆசிரியர் பயிற்சிக்குத் தேர்வானேன் அக்காலத்தில் பொருளியல் பாடம் உயர்நிலைப்பள்ளிப் பாடத்திட்டத்தில் இடம் பெறவில்லை. எனவே, பொருளியல் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பயிற்சிக்கு இடம் கிடைப்பது அரிது! ஆனால், கூடாது என்று கண்டிப்பான விதிமுறை இல்லை. எனவே, பூகோள பாடத்தை விருப்பப் பாடமாகக் கொடுக்கும்படி கோரி இருந்தேன். அந்தக் காலத்தில், பட்டப்படிப்பில் பூகோள பாடத்திற்கு இடம் வைக்கவில்லை. ஆகவே, பூகோள பட்டதாரிகளின் போட்டி இராதென்று தெரியும். அந்தத் துணிச்சலில், அதற்கும் சிறுவர் கல்விக்கும் விண்ணப்பம் போட்டுவிட்டு, நம்பிக்கையோடு இருந்தேன். நேரா நேரத்தில் பதில் வந்தது, எனக்குத் தேர்வு கிடைத்தது. ஆங்கில மொழியும் பூகோளமும் கற்பிக்கும் பிரிவுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டேன். துணைப்பாடமாக சிறுவர் கல்வி'யும் கிடைத்தது. தேர்ந்தெடுத்தவர்கள் எவர்? சைதை ஆசிரியர் கல்லூரி முதல்வர் திரு. கிருஷ்ணம்மா இவர் தெலுங்குக் கிறித்தவர். குழுவில் பூகோளப் பேராசிரியர் திரு. நெ. சுப்பிரமணிய அய்யர்: ஆங்கிலத் துனைப் பேராசிரியர் பூரீமான் பாதர், சிறுவர் கல்விப் பேராசிரியை செல்வி அலெக்சாண்டர் ஆகியோர் ஆவர். இவர்களில் எவரும் எனக்கு முன்னர் அறிமுகம் இல்லாதவர்கள். எவருக்கும் நான் பரிந்துரையும் கொண்டுபோக வில்லை. இருப்பினும் நான் தேர்ந்து எடுக்கப்பட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/548&oldid=787479" இலிருந்து மீள்விக்கப்பட்டது