பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508 நினைவு அலைகள் பதினாறில் ஒரு பங்கு சேமிப்பு கட்டாயம். ஆனால், ஊழியர் விரும்பினால் ரூபாய்க்கு இரண்டரை அனா (இப்போதைய பதினைந்து காசு) வரை சேமிக்கலாம். இவ்விரண்டிற்கும் நிர்வாக மன்றத்தின் முன்னொப்புதல் தேவை. அப்படி ஒப்புதல் பெற்றுச் சேமித்தாலும், ஆட்சி மன்றம் பதினாறில் ஒரு பங்கையே தமது பங்காகப் போடும். அதற்கு மேல் அதிகம் போடாது. நண்பர் காட்டிய நல்வழி நான் உதவிப் பஞ்சாயத்து அலுவலனாகச் சேர்ந்த சில நாள்களுக்குப் பிறகு திரு. மா.கி. திருநாவுக்கரசு என்பவரைக் காண நேர்ந்தது. அவர் எனக்குத் தூரத்து உறவு; நெருங்கிய நண்பர்; ஆசிரியர்: என்னுடன் உரிமையோடு உரையாடக்கூடியவர். அவர் எனக்கு நல்வழிகாட்டினார். என்ன வழி? 'உன்னுடைய கை ஓட்டைக்கை, பணம் கிடைத்தால் நொடியில் செலவு செய்து விடுவாய். வெற்றிலை பாக்கு, சிகரெட், பொடி, சினிமா ஆகிய எத்தகைய கெட்ட பழக்கமும் உனக்கு இல்லை என்பது எனக்குத் தெரியும். உன்னுடைய நண்பர்கள் எவரும் கெட்ட பழக்கமுடையவர் அல்லர். உன்னை உறிஞ்சக் கூடியவர் அல்லர். 'இருப்பினும் விருந்தோம்பியே பணம் முழுவதும் செலவு செய்து விடுவாய். அது உன் இயல்பு. உன் தாத்தா கூட, வயிறு நிரம்பினாலும், பானை மூடமாட்டார். அவர் காலத்திற்கு, அவர் நாட்டுப்புற வாழக்கைக்கு அது சரி. உன் காலத்திற்கு, உன் பிற்கால வாழ்க்கைக்கு அது ஒத்து வராது. 'எனவே மாவட்ட ஆட்சிக்குழுவின் இசைவைப் பெற்று, நீயாகவே, இப்போதிலிருந்தே பிராவிடெண்ட் நிதியில் சேர்ந்து கொள்: பதினாறில் ஒருபங்கு கட்டுவதோடு நிறைவு கொள்ளாதே. விதிமுறை இடம்கொடுக்கும் ரூபாய்க்கு இரண்டரை அனா விழுக்காட்டில் கட்டிக் கொண்டு வா. 'அந்தச் சேமிப்பு உனக்கு ஒய்வு பெற்ற காலத்தில் கை கொடுக்கும். அது தவிர வேறொரு சேமிப்பும் உன்னிடம் தங்காது. இப்படிச் சேமிக்கும் வழியை எனக்குச் சொல்லித் தந்தார். அவர் எதையும் மிகைப்படுத்தவில்லை என்பது எனக்குப் புலனாயிற்று. நாளை வரும்போது பார்த்துக்கொள்வோம் என்று ஒதுங்கும் பொறுப்பற்ற போக்கு எனக்கு எப்போதுமே இல்லை. எப்படியோ, எங்கிருந்தோ, கூரையைப் பிய்த்துக்கொண்டு பணம் வரும் என்னும் மூட நம்பிக்கைக்கு நான் ஆட்படவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/551&oldid=787488" இலிருந்து மீள்விக்கப்பட்டது