பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 515 “ஆறு, எட்டுவரை வரப்போகும் இந்தி கட்டாயப் பாடம், பொது மக்கள் நலனுக்குக் கேடானது. கல்வியின் வேரில் வெந்நீர் ஊற்றுவதாகும் என்று பெரியவர் விரிவுரை ஆற்றினார். அதைப் பொறுமையாகக் கேட்ட காங்கிரசுத் தொண்டர், 'இராசாசிக்கு இது கூடவா தெரியாது போகும்' என்று பெரியவரை மடக்க முயன்றார். பெரியவர் பொறுமை இழக்காது, 'இராசாசி மூதறிஞர் என்பதில் அய்யமில்லை. எனக்குத் தெரிந்தது.அவருக்குப் புரியாது, என்று எண்ண முடியாது. "நான் சுட்டிக்காட்டிய கேடுகளுக்கு நீங்கள் கூறும் பதிலில், பெரியவரிடமும் காங்கிரசிடமும் கொண்டுள்ள பக்தி மணம் மட்டுமே வீசுகிறது. 'எனக்குப் புரியாத ஏதோ ஆழமான உள் எண்ணம் பற்றியே இராசாசி இந்தி மொழியைப் பிஞ்சுகளின்மேல் கட்டாயப்படுத்துகிறார் என்று வேண்டுமானால், ஒப்புக்கொள்ளுகிறேன். “இத்திட்டம் பொது மக்களுக்கு நன்மையானதல்ல; கேடானது என்பது வெளிப்படை' என்றார் பெரியவர். "உங்களுக்கு அரசியல் கட்சி ஈடுபாடு சிறிதும் இல்லை. எதையும் அதனதன் உண்மைத் தன்மையில் மதிப்பிட முயல்கிறீர்கள் என்பது தெரியும். 'அப்படிக் கட்டாயப் பாடமாவதற்கு இன்னும் பல மாதங்கள் உள்ளன. அதற்கிடையில், மக்கள் கருத்துகள் பொங்குவது உறுதி. அதன் அடிப்படையில் செய்யவேண்டிய மாற்றங்களைச் செய்யாமலா போவார்கள், என்று அமைதியாக நம்பிக்கையோடு காங்கிரசுத் தொண்டர் முடித்தார். பகை உணர்ச்சி இல்லை அக்காலச் சமுதாயத்தின் ஒரு சிறப்பு - எல்லா இடங்களில் இல்லாவிட்டாலும் பெரும்பாலான சிற்றுார்களில் சிறப்பாக இருந்தது. அது என்ன? கருத்து மாறுபாடு பற்றி, பகையணிகளாக நிறபது அன்று குறைவு. வெவ்வேறு கருத்துடைய சிற்றுார்களில், அடிக்கடி கூடி வாதிடுவார்கள்: கருத்துகளைப் பரிமாறிக் கொள்வார்கள். நேர் எதிர் கோணங்களில் நிற்பவர்களுக்கிடையிலும் இன்றைக்கு நான் காணுகிற அளவு காழ்ப்புணர்ச்சியை, வெறுப்பை அன்று கண்டதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/558&oldid=787498" இலிருந்து மீள்விக்கப்பட்டது