பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

517 நெ. து. சுந்தரவடிவேலு مـيـر - பொதுக்கூட்டங்கள், தனி மாநாடுகள் வாயிலா? கட்டாய இந்தி எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியது. அதேபோல, ' உருவங்களில் விரைவாக ஆதரவும் திரட்டப்பட்டது. 1937 டிசம்பரில் திருச்சியில், தோழர்கள் டி.பி. வேதாசலம், கி.ஆ.பெ. விசுவநாதம் முதலியோர் முன்னின்று, நீ" சோமசுந்தர பாரதியார் தலைமையில் தமிழர் மாநாடு' நடத்தியதைக் குறிப்பிட வேண்டும். அம்மாநாடு கட்டாய இந்தியைக் கண்டித்து முடிவு செய்தது. பின்னர். மாநில இந்தி எதிர்ப்பு மாநாடு காஞ்சிபுரத்தில் 1936 பிப்ரவரியில் மாநில இந்தி எதிர்ப்பு மாநாடு' என்ற பெயரில் பெரியதோர் மாநாடு நடந்தது. தந்?? பெரியாரைப் பின்பற்றுபவர் இம்மாநாட்டை ஏற்பாடு செய்தார்கள் தோழர்கள் அ.க. தங்கவேலர், எஸ்.வி. லிங்கம் இருவரும் தீவிரப் பொறுப்பேற்று மாநாட்டை நடத்தினார்கள். சர்.கே.வி. ரெட்டி தலைமை தாங்கினார். து; இம்.கிருஷ்ணன் நாயர் மாநாட்டைத் திறந்து வைத்தார். அம் மாநாடு, தமிழர் தம் உணர்ச்சியைத் தட்டி எழுப்பியது. தமிழ் வளர்ச்சி பற்றி அக்கறை கொள்ளாதவர்களிடையிலும் தமிழ் ஆர்வத்தை வேகமாக வளர்த்தது. அம் மாநாடு கட்டாய இந்திப் பாடத்தைக் கைவிடும்படி அ கோரும் முடிவினை மேற்கொண்டது. அப்புறம், பல ஊர்களில் கட்டாய இந்திக் கண்டனக் கூட்டங்கள் நடந்தன. தமிழ் மக்கள், இந்தி விரும்பிகள், இந்தி எதிர்ப்பார்குள் என்று இருவேறு அணிகளாகப் பிரிந்து, ஒருவரோடு ஒருவர் வெறுப்புக் கொண்டு நின்றார்கள். அப்போக்கு இன்றும் தன்"க: ' இான் "ப . ரசைக்

காஞ்சிபுரம் மாநாட்டிற்குப் பின்னர் புதியதோர் போராட்ட முறை மேற்கொள்ளப்பட்டது. அது என்ன? இந்தி எதிர்ப்புப் படை திருச்சி நகரத்திலிருந்து, நூறு பேர்களைக் கொண்ட இந்தி எதிர்ப்புப்படை ஒன்று புறப்படுவது. அது சென்னி" நோக்கித் [! நடையாகவே வருவது. வழியில் உள்ள ஊர்களில் "-" இந்திப் பாடத்தை எதிர்க்கும் கொள்கையைப் பரப்புவது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/560&oldid=787504" இலிருந்து மீள்விக்கப்பட்டது