பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518 நினைவு அலைகள் இத்திட்டத்தை, திருச்சியில் நகர தூதன்' என்னும் வார இதழை நடத்தி வந்த பேனா மன்னர், மணவை திரு. மலைசாமி அவர்கள்தந்தை பெரியாரிடம் கூற, அவர் ஊக்க, ஆர்வத்தோடு செயலுக்கு வந்தது. இந்தி எதிர்ப்புப் படை, திட்டமிட்டபடி, குறித்த நேரத்தில் திருச்சியில் இருந்து புறப்பட்டது. அப்படையின் தலைவர், இராவ் சாகேப் அய். குமாரசாமிப் பிள்ளை என்னும் தமிழ் அறிஞர் ஆவார். அப்படையில் திருமலைசாமி சேர்ந்து வந்தார். புகழ்மிக்க பேச்சாளர்களான பட்டுக்கோட்டை அழகிரிசாமி, பாவலர் பாலசுந்தரம், திருப்பூர் மொய்தீன் ஆகியோர் நடந்தே வந்தார்கள். திருமதி மூவலூர் இராமாமிர்தத்தம்மாள் அப்படையில் சேர்ந்து நடந்து வந்தார்கள். இம்மூதாட்டி, தன்மான இயக்கத்தில் பெருந்தொண்டு ஆற்றியவர்; பெண்கள் உரிமைக்கு ஆக்கப்பணி புரிந்து உள்ளவர். பல கலப்புத் திருமணங்களுக்குத் துணை நின்றவர். திருச்சிலிருந்து சென்னைவரை வெற்றிகரமாக நடந்தே வந்த அப்படையில் வீர உரைகளும் வழிநடைப் பாடல்களும் தமிழ்நாடு முழுவதையும் தட்டி எழுப்பியது. அப்படைக்கு, வழிநெடுகிலும் பலர் உதவினார்கள், அதில் என்னுடைய ஆதரவாளர்கள் இருவர் இருந்தார்கள். தோழர் கயப்பாக்கம் முத்துலிங்க ரெட்டியார் என்னும் பண்பாளர், அப்போதைய செங்கற்பட்டு மாவட்ட ஆட்சிக் குழுவில் உறுப்பினர். எனக்கு ஆதரவானவர்; நல்ல காங்கிரசுக்காரர். அவருடைய தம்பி தோழர் புலம்பாக்கம் முத்துமல்லா, என்னுடைய கல்லூரிப் பருவம் முதல் என்னுடைய நண்பர், எனினும் இரண்டொரு ஆண்டு மூத்தவர், இவரும் காங்கிரசுக்காரர். அண்ணன் தம்பி இருவரும் அன்றும் சரி, இன்றும் சரி, கதர் உடையே அணிந்து வருபவர்கள். கட்டாய இந்திப் பாடம் அவர்களுக்கு உடன்பாடு அல்ல. சிறு வகுப்புகளில் அதைத் திணிப்பது தீங்கு என்பதை, கட்சிக் கண்ணோட்டத்தில் பார்க்கும் அவர்களும் புரிந்து கொண்டார்கள். மேற்கூறியவர்கள் இருவரும் இந்தி எதிர்ப்புப் படைக்கு, திண்டிவனம் முதல் செங்கற்பட்டு வரை, புரவலர்களாகச் செயல்பட்டார்கள்; பல உதவிகளையும் தாராளமாகப் புரிந்தார்கள். பல்வேறு பிரிவினரும் பரவலாக எதிர்த்தபோதும் அன்றைய மாகாண ஆட்சி மறு பரிசீலனை செய்யவில்லை. தேர்தல் வாக்குறுதிகளில் சேராத, பிற காங்கிரசு அமைச்சரவைகள் செய்யாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/561&oldid=787507" இலிருந்து மீள்விக்கப்பட்டது