பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o நினைவு அலைகள் உள்ளத்தை உணர்ந்தேன் மூன்றாம் நாள் இரவு ஒன்பது மணிக்குமேல், நிறுத்தி நிறுத்தி, மிக மெல்லிய குரலில் பதில் சொன்னார். 'வயிற்றைப் பிடுங்குவது வேதனையாகவே உள்ளது. அதைத் தாங்க முடியாது துடிக்கிறேன். 'ஆனால் நான் உண்ணாநோன்பைக் கைவிட்டுவிட்டால், எனக்குப் பெருத்த இழிவு வந்து சேரும். இந்தி எதிர்ப்பு இயக்கத்தைப் பெரிதும் பாதிக்கும்.' இது அவருடைய கவலை! பளிச்சென்று ஒரு வழி மின்னிற்று, அவர் காதோடு அதைப் போட்டேன். எவரிடமும் இதுபற்றிப் பேச வேண்டாமென்று கேட்டுக்கொண்டேன். என் முயற்சி அடுத்த நாள் விடுப்பு எடுத்துக் கொண்டேன். காலையில் திருவாளர் மீ. பக்தவத்சலம் அவர்களைக் கண்டேன். ஏதேதோ பேசிவிட்டு இந்தி எதிர்ப்பைப் பற்றி எடுத்தேன். உடனே அவர் உண்ணா நோன்பைக் கண்டித்தார். அவர் கூறியது எனக்கு முழுக்க முழுக்க உடன்பாடு. அதை வாய்விட்டுக் கூறினேன். ஜெகதீசன் படும் உடல் வேதனையை விளக்கினேன். அதைக் கைவிட்டுவிடும்படி செய்ய இழையளவு வாய்ப்பு இருக்கிறது. உண்ணா நோன்பைக் கைவிட்டதைச் சொல்லி ஆளுங்கட்சி மேடைதோறும் துாற்றுமே என்று அச்சப்படுகிறார் என்று குழைந்து கூறினேன். அவர் ஒன்றும் அரசியல்வாதியல்ல. ஆகவே அவர் 'பட்டினி கிடப்பதை நிறுத்தி விட்டால், அதைப் பெரிதாக்கி, அரசியல் ஆதாய தேடமாட்டோம். இது உறுதி' என்றார். அடுத்த நடவடிக்கை பற்றி, அவரோடு முடிவு செய்யப்பட்டது. பிறகு, குத்துசி குருசாமியாரைத் தேடிச் சென்றேன். அவரிடம் ஜெகதீசன் தாங்க முடியாத் வேதனையில் தவிப்பதைக் கூறினேன். 'தன்மான இயக்கத்திற்கு உண்ணா நோன்பு உடன்பாடு அல்ல! அப்படி ஒருவர், இயக்க உறுப்பினர் அல்லாதவர் தொடங்கியதைக் கண்டிப்பதோ, இருட்டடிப்பதோ உல்கியல் ஆகாது. அதனால்தான் நாள்தோறும் விளம்பரப்படுத்துகிறோம். பெரியாருக்கு இது சிறிதும் பிடிக்கவில்லை' என்றார். எனக்குப் பிடி கிடைத்தது. நாங்கள் இருவரும் பெரியாரைப் பார்த்தோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/565&oldid=787514" இலிருந்து மீள்விக்கப்பட்டது