பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524. நினைவு அலைகள் திரு. மகாதேவன் அப்படியே செய்தார். அப்போதைக் கப்போது எனக்குத் தகவல் கொடுத்தார். நான் பெரியாருக்குத் தெரிவித்தேன். இரண்டு மூன்று நாள்களில் முயற்சி வென்றது. இந்தி எதிர்ப்பு இயக்கப் பொறுப்பாளர்களின் முன்னொப்புதலோடு, தமது குடும்பப் பெரியவரை மதிக்கும் வகையில் அவர் வேண்டு கோளின்படி, உண்ணா நோன்பை என் நண்பர் ஜெகதீசன் கை விட்டு விட்டார். இவர் இன்று கோவையில் வாழ்கிறார். இந்தி எதிர்ப்பு இயக்கம் இதனால் சிறிதும் பாதிக்கப்படவில்லை; அது தீவிரமாகத் தொடர்ந்தது. 76. பெரியார் சிறை புகுந்தார் பள்ளி முன்மறியல் கட்டாய இந்திப் பாட எதிர்ப்பு, பொது மக்கள் இயக்கமாக வளர்ந்தது. நாள்தோறும் அத்திட்டத்தைக் கண்டித்துப் பல ஊர்களில் பொதுக்கூட்டங்கள் நடந்தன. ஆளுங்கட்சியின் சார்பில் ஆதரவுக் கூட்டங்களும் நடந்தன. 1938 கல்வியாண்டின் தொடக்கத்தில் இந்தியை ஆறாம் வகுப்பில் திணிக்கும் உயர்நிலைப்பள்ளியொன்றின் முன்மறியல் செய்வது என்று தந்தை பெரியாரும் மற்ற இந்தி எதிர்ப்புத் தலைவர்களும் முடிவு செய்தார்கள். எந்தப் பள்ளி முன் என்பதே அடுத்த கேள்வி. சென்னை தங்கசாலைத் தெருவில் நடைபெறும் இந்து தியலாஜிகல் உயர்நிலைப்பள்ளிமுன் மறியல் செய்வதென்பது முடிவு. குறிப்பிட்ட நாளன்று குறித்த நேரத்தில் திட்டமிட்டபடி உயர்நிலைப் பள்ளியின்முன் இந்தி எதிர்ப்பாளர்கள் நால்வர் வந்து நின்றனர். அவர்கள் எங்கோசந்து பொந்துகளில் இருந்து திடுதிப்பெனப் பள்ளிக்குமுன் வந்து நிற்கவில்லை. மாறாக, யானைக் கவுனி காவல் நிலையத்தின் அருகில் இருந்து ஊர்வலமாக வந்தார்கள். அவர்களை ஆதரிப்போர் பலர் பின்தொடர்ந்து வந்தார்கள். வழி நெடுகிலும் அவர்கள் முழங்கிய முழக்கங்கள் எவை? கட்டாய இந்தி ஒழிக, தமிழ் வாழ்க’ என்பனவாம். தியலாஜிகல் பள்ளியண்டை வந்து அடைந்ததும் உடன் வந்தோர் ஒதுங்கி நிற்பார்கள். மறியல் செய்வோர் மட்டும் பள்ளியின் நுழைவாயிலுக்கு முன்னே, ஒழுங்காகவும் ஒரமாகவும் நின்று, மேற்கூறிய முழக்கங்களைத் தொடர்ந்து முழங்குவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/567&oldid=787519" இலிருந்து மீள்விக்கப்பட்டது