பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/568

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 525 மூன்று நான்கு மணித்துளிகளில் காவல் துறையினர், மறியல் செய்வோரைச் கைதுசெய்து கொண்டுபோய் விடுவார்கள். கூடியிருந்து பொது மக்கள் கட்டாய இந்தி ஒழிக, தமிழ் வாழ்க’ என்று முழக்கமிட்டபடி அமைதியாகக் கலைந்து போவார்கள். கைதானவர்களை, காவல்துறை அலுவலர்கள், குற்றவியல் வழக்கு மன்றத்தில் நிறுத்துவார்கள். அவர்களுக்குக் கடுந்தண்டனை, நீண்ட தண்டனை என்று பல தண்டனைகள் விதிக்கப்படும். வன்முறை ஏதும் நிகழாதபோதும் ஒருவருடைய உடலுக்கோ பொருளுக்கோ கேடு விளையாதபோதும் கடுமையான சிறைத் தண்டனை தந்தது, அச்சமூட்டுவதற்குப் பதில், பொது மக்களிடையே அரசின் பால் வெறுப்பையும் நீதிமன்றங்கள்மேல் நம்பிக்கை யின்மையையும் வளர்த்தது. கட்டாய இந்தி எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் பொறுப்புள்ள குடிமக்கள். அரசிற்கோ, பொது அமைதிக்கோ கேடு விளைவித்து விளம்பரந்தேட வேண்டிய நிலையில் இல்லாதவர்கள். எனவே, நாளைக்கு ஒரு முறையே மறியல் நடக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒரு நாள் மறியல்காரர்கள் கைது செய்யப்பட்டால், அடுத்த நாள் காலை வரை அப்பள்ளிக்கோ, போக்குவரத்துக்கோ இடையூறு வராது. சென்னையில் நடக்கும் கட்டாய இந்தி எதிர்ப்பு மறியலை முன்னின்று முறைப்படுத்த சர்வாதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். சில நாள்களில் அவர் சிறைக்குள் தள்ளப்படுவார். அடுத்த சர்வாதிகாரி நியமன அறிவிப்பு வரும். அவர் சிறைப்படுத்தப் பட்டால் மூன்றாவது சர்வாதிகாரி சுட்டிக்காட்டப்படுவார். போராட்ட வீரர்கள் திரு. செ.தெ. நாயகம் கூட்டுறவுத் துறையின் ஒய்வு பெற்ற துணைப்பதிவாளர் முதல் சர்வாதிகாரி. இந்தியைக் கட்டாயப் பாடமாக்கிய ராஜாஜி அமைச்சரவையில் அமைச்சராக இருந்த இராமநாதனின் தம்பி மாயூரம் எஸ். சம்பந்தம் சர்வாதிகாரிகளில் ஒருவர். அறிஞர் அண்ணா, புவனகிரி நமச்சிவாயம், திருச்சி சைமன் இராமசாமி மற்றிருவர். பல ஊர்களிலிருந்தும் மறியல் தொண்டர்கள் சென்னைக்கு வந்து சேர்வார்கள். சிலவேளை பலர் வந்து சேர்ந்து விடுவார்கள். வந்தவர்கள் தங்கி உண்ண, போராட்டக்குழுவின் சார்பில் ஏற்பாடு செய்திருந்தார்கள். செலவுக்கான நிதி, பொது மக்களின் நன்கொடைகள் உண்டியல் தண்டல் வழியாகக் கிடைத்தது. அக்குழுவின் கெளரவ காசாளராகத் திருமதி. குஞ்சிதம் அம்மையாரின் தந்தை திருவாரூர் சுப்ரமணியம் இருந்தார். இவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/568&oldid=787521" இலிருந்து மீள்விக்கப்பட்டது