பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526 நினைவு அலைகள் == பெரியாரைப் போன்றே பணத்தை விழிப்பாகக் காக்கும் இயல்பினர். கணக்கில் கண்டிப்பானவர். அய்ம்பது காசு செலவு செய்ய வேண்டிய இடத்தில் அய்ம்பத்தோரு காசு செலவு செய்ய மாட்டார். எனவே, பெரியாரின் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவராக இருந்தார். கட்டாய இந்தி எதிர்ப்பு இயக்கம் பல தமிழர்களின் நாவன்மையை, எழுத்து வன்மையை உலகறியச்செய்தது: செயல் திறனை, ஆளுமையை, தியாக உணர்வை வெளிப்படுத்தியது. தன்மான இயக்கம் அடையாளம் காட்டிய பட்டுக்கோட்டை அழகிரிசாமி, பூவாளுர் பொன்னம்பலனார். மூவலூர் இராமாமிர்தம் மாள், திருச்சி கே. எம் பாலசுப்ரமணியம், சா. குருசாமி, எஸ்.வி. லிங்கம், அறிஞர் அண்ணா போன்ற சிறந்த பேச்சாளர்களோடு, பாவலர் பாலசுந்தரம், திருப்பூர் மொய்தீன், திருப்பூர் எஸ்.ஆர் சுப்ரமணியம், சேலம் நெட்டோ, சித்தையன், நடேசன், குடியேற்றம் அண்ணல் தங்கோ, காஞ்சி மணிமொழியார், சாமிசண்முகானந்தா, சாமி அருணகிரிநாதர், ஈழத்து அடிகள் போன்றோர் மேடைகளில் இடிமுழக்கம் செய்யக் கண்டோம். கட்டாய இந்தி எதிர்ப்பு இயக்கம் வளர்த்த பேச்சாளர்கள் பட்டியல் நீளமானது. அவர்களில் சென்னையைச் சேர்ந்த சிலரைமட்டும் இங்கே குறிப்பதற்கு என்னை மன்னிக்கவும். சென்னையில் பாசுதேவ், ஆல்பர்ட் ஜேசுதாசன், சத்தியவாணிமுத்து, அமிர்தவாசகம், மதுரகவி முருகேசபாகவதர் ஆகியோர் சிலராவர். இந்தி எதிர்ப்புப் போர் 1938-39 கல்வியாண்டு முழுவதும் 1939-40 கல்வியாண்டில் பல திங்களும் தொடர்ந்து, மொத்தத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சிறை சென்றார்கள். மறியல் தொடங்கிச் சூடு பிடித்த பின் தாய்க்குலமும் மறியலில் ஈடுபட்டது. டாக்டர் தருமாம்பாள் அம்மாள் அதற்கு உந்தாற்றலாக விளங்கினார்கள். திருமதி உண்ணாமலை அருணகிரிநாதர், திருமதி மலர் முகத்து அம்மையார், திருமதி தாமரைக் கண்ணிபோன்ற சிலருடைய பெயர்களே என் நினைவிற்கு வருகின்றன. கூட்டங்களுக்குச் சென்றேன் கட்டாய இந்தி எதிர்ப்புப் போர் நடந்த முதலாண்டில், நான் சென்னை, சைதை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். வகுப்பில் ஒருமனப்பட்டுப் பாடங்கேட்பேன். எனவே, தனியே படிக்கும் தேவை மிகவும் குறைவு. மா?ை வேளைகளை எப்படிச் செலவழிப்பேன்? இந்தி எதிர்ப்புக் கூட்டங்களுக்குப் போவதில் செலவிட்டேன். சென்னை திருவல்லிக்கேணி கடற்கரை, உயர்நீதிமன்ற கடற்கரை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/569&oldid=787523" இலிருந்து மீள்விக்கப்பட்டது