பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528 நினைவு அலைகள் மறைமலை அடிகளாரின் திருமகள் திருவாட்டி நீலாம்பிகை அம்மையார் தலைமை தாங்கினார்கள். அம் மாநாட்டில் உரையாற்றும் படி, ஈ.வெ. ராமசாமி அழைக்கப்பட்டார். அவர் அப்படியே உரையாற்றினார். அம்மாநாட்டில் ஈ.வெ. ராமசாமிக்குப் பெரியார் என்னும் பட்டம் முறைப்படி வழங்கப்பட்டது. ஆனால் 1926 முதலே ராமசாமிப் பெரியார் என்று பலர் பொதுமேடைகளில் அவரை அழைப்பது வழக்கமாயிருந்தது. மகளிர் மாநாட்டிற்குப்பின் பெரியார் ராமசாமி கைது செய்யப்பட்டார். 'பெண்களை இந்தி எதிர்ப்பு மறியலுக்குத் துண்டினார். அத்துரண்டுதலால், சட்டம் ஒழுங்கைக் குலைக்க முயன்றார் என்பவை பெரியார்மேல் சுமத்தப்பட்ட இரு குற்றச் சாட்டுகள் ஆகும். 1938 டிசம்பர் திங்கள் 5,6 ஆம் நாள்கள் அவ்வழக்கு நடந்தது. வழக்கம்போலப் பெரியார் வழக்கு மன்றத்தில் எதிர் வழக்காடாமல், ஒரு வாக்கு மூலத்தை மட்டும் கொடுத்தார். அதில் தாம் தொடர்புடைய தன்மான இயக்கம், தமிழரியக்கம், நீதிக்கட்சி இயக்கம் ஆகிய அனைத்தும் சட்டத்தை மீறக்கூடாதென்னும் கொள்கையுடையது. அது மாற்றப்படவே இல்லை. மறியல் செய்தது டெமாண்ஸ்ட்ரேஷனே ஒழிய சட்டத்தை மீறத் தூண்டுவது அல்ல' என்று விளக்கினார். விசாரணை என்பது சடங்குதானே. அச்சடங்கின் முடிவில். இவர் (பெரியார்) செய்த குற்றங்கள் இரண்டு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் ஆண்டு கடுங்காவல்; ஒவ்வோராயிரம் ரூபாய் அபராதம். அபராதம் செலுத்தாவிடில் மீண்டும் அவ்வாறு மாதம் தண்டனை. இரு தண்டனைகளையும் இரண்டு தனித்தனி காலத்தில் அடைய வேண்டும்' என்று முடிவு கூறப்பட்டது. அதைச் செங்கோல், என்று ஏற்கத் தமிழர்கள் மனம் ஒப்பவில்லை. கிடைத்த சாக்கைக் காட்டி, பழி வாங்கும் முடிவு என்றே பொது மக்கள் தீர்மானமாகக் கருதினார்கள். தங்கள் கொதிப்பைக் காட்டும் வகையில் பல்லாயிரக் கணக்கானவர்கள், பார்ப்பனச் சிற்றுண்டிசால்ைக்குச் செல்வதை விட்டு விட்டார்கள். அவர்களில் பலர் என் நண்பர்கள். பெரியார் பற்றித் திரு.வி.க. அரசியல் பழி வாங்கும் தீய நிலை, இந்திய அரசியல் வானில் அடிக்கடித் தென்படக் காண்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/571&oldid=787529" இலிருந்து மீள்விக்கப்பட்டது