பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/574

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 531 மாநாட்டினர் என்ன செய்தார்கள்? பெரியார் உருவத்தை தலைமை நாற்காலியில் அமர்த்தினார்கள். பெரியார் வந்து இருந்தால் எப்படித் தலைவரை முன்மொழிதலும் வழிமொழிதலும் நடந்திருக்குமோ, அப்படியே நிகழ்ச்சிகள் நடந்தன. அது பெரியாரின் பெருமையினைக் கோடிட்டுக்காட்ட உதவிற்று. பெரியார் சிறை புகு முன்பே தலைமை உரையை எழுதி அனுப்பியிருந்தார். அவ்வுரையை சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் படித்தார். அவ்வேளை பன்னிர் செல்வம் நெஞ்சை நெகிழவைக்கும் செயலொன்றைச் செய்தார். தமக்குச் சூட்டிய பெரிய மலர் மாலையை அவர் பெரியார் உருவத்தின் காலடியில் வைத்தார். கூடியிருந்த அய்ம்பதாயிரம் மக்களும் உள்ளம் உருகினர். உணர்ச்சி கொப்பளிக்க அனைவரும் எழுந்து நின்றார்கள். தமிழிலும் தெலுங்கிலும் ஒரே குரலில் உறுதி கூறினார்கள். என்ன உறுதி? 'மாபெரும் தலைவரே! தங்கள் உடல் சிறைப்பட்டிருந்தாலும் தங்கள் வீரத்திரு உருவத்தின்முன் நாங்கள் அனைவரும் எழுந்து நின்று ஒன்றுபட்டிருக்கிறோம். தங்கள் தலைமையில் நாங்கள், அனைவரும் சொல்வழி நின்று கட்சிவளர, மக்கள் வாழ, குறிக்கோள் நிறைவேற ஒயாது உழைத்து வெற்றிபெறுவோம் என உறுதி அளிக்கிறோம் என்பதாகும். அப்படி உறுதி எடுத்தவர்களில் நானும் ஒருவன் என்பதை அடக்கத்தோடு குறிக்கிறேன். அம்மாநாட்டுத் தலைமை உரையில் பெரியார் ஆழமான சில பெரியாரோடு கருத்து வேறுபாடு கொண்டிருந்த இயக்கத்தவர்களுக்குப் பதிலாக அவ்வுரை அமைந்திருந்தது. உலக ஒற்றுமையை நான் வெறுப்பவன் அல்ல. உலக மக்கள் சமதர்ம வாழ்வை மேற்கொள்வதை வேண்டாமென்று கூறவில்லை. மக்கள் யாவரும் விகிதாசாரம் உழைத்து, அவ்வுழைப்பின் பயனை விகிதாசாரம் பகிர்ந்து, தத்தம் தகுதிக்கும் தேவைக்கும் அவசியமான அளவு அனுபவிப்பதை நான் ஆட்சேபிக்கவில்லை. "ஆனால் தேசியம் என்றும், தேச சேவை என்றும், தேசபக்தி என்றும், தேசவிடுதலை என்றும், தேச ஒற்றுமை என்றும், ஆத்மார்த்தம் என்றும், பிராப்தம் என்றும் பல பல சொற்களைக் காட்டி மெய் வருந்தி, பாடுபட்டுப் பொருளிட்டும் பொதுமக்களை, கட்டின ஆடை கசங்காமல், மெய்யில் வெயில் படாமல் வாழ்க்கை நடத்தும் ஒரு சிறு கட்டத்தார் வஞ்சித்து, ஏமாற்றி, வயிறு வளர்ப்பதை ஏன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/574&oldid=787532" இலிருந்து மீள்விக்கப்பட்டது