பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/575

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532 நினைவு அலைகள் உழைப்பாளிகளைவிட அதிக சுகமான வாழ்வு வாழ்வதை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகிறேன். 'நம் நாட்டுத் தொழிலாளர்கள், பார்ப்பனரல்லாதார் இயக்கம் வேறு, தொழிலாளர்கள் வேறு என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். 'இக்கருத்து மாறி, இரண்டும் ஒன்றுதான் என்ற உண்மையான எண்ணமும் உணர்ச்சியும் ஏற்படும்வரை இரண்டும் உருப்படா என்பதே என் அபிப்பிராயம். 'பார்ப்பனரல்லாதார் என்கிற வார்த்தையும், தொழிலாளர் என்கிற வார்த்தையும் ஒன்றே என்பதை நாம் மறக்கவே கூடாது." பெரியாரின் தெளிவுரை, மாநாட்டிற்கு வந்திருந்தோர் அனைவரையும் கவர்ந்தது. பார்ப்பனரல்லாதார் இயக்கம், தொழிலாளர் இயக்கம் பற்றிய தெளிவைக் கண்ட இம்மாநாடு, நீதிக் கட்சியின் குறிக்கோள் பற்றியும் பாராட்டத்தக்க மாற்றத்தைக் கண்டது. ஈ.வெ.ரா. பெரியாரின் சிந்தனைச் சூடு அப்படிச் சமைத்தது. அதுவரை நீதிக்கட்சியில் அரசியல் குறிக்கோள் என்ன? குடியேற்ற நாட்டு நிலை பெறுவது என்பதாகும். பதினான்காவது மாநாட்டில் குறிக்கோள் உயர்ந்து விட்டது. எப்படி? 'முழுத் தன்னாட்சி (முழுச் சுதந்திரம்) கட்சியின் நோக்கம் என்று மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. இது ஏற்கெனவே, பெரியார் வழி நடத்தலில் 1932இல் ஈரோட்டில் உருவாக்கப்பட்ட சுயமரியாதைச் சமதர்மத் திட்டத்தில், குறிப்பிடப்பட்ட குறிக்கோளாகும் என்பதை நினைவு படுத்துகிறேன். அந்தச் சுயமரியாதைச் சமதர்மத் திட்டம் அனைத்துலக சமதர்மத் திட்டமாகிய உற்பத்திச் சாதனங்கள், போக்குவரத்துச் சாதனங்கள், பெரு வணிகம், வங்கிகள் ஆகியவற்றைத் தேசிய உடைமை ஆக்குவதோடு சாதி ஒழிப்பையும் நோக்கமாகக் கொண்டது. இத்திட்டத்தை 1935இல் நீதிக்கட்சி ஏற்றுக்கொண்டது. 77. எல்.டி. பட்டம் பெற்றேன் இப்போது என் கதையைச் சொல்லுகிறேன். வெளி உலக நிகழ்ச்சிகளின்மேல் கவனம் செலுத்திய போதிலும் நான், ஆசிரியர் கல்லூரிக்குச் செல்வதில் தவறியதில்லை. எனவே 1939 சனவரி மூன்றாம் வாரத்தோடு நான் போதிய நாள்கள் சென்று விட்டேன். கல்லூரி முதல்வர். திரு. கிருஷ்ணம்மா என்னும் தெலுங்குக் கிறுத்தவரை அணுகினேன். அக்கால கட்டத்தில், சம்பளம் இல்லா விடுப்பில் நான் துன்பப்படுவதை எடுத்துக் கூறினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/575&oldid=787533" இலிருந்து மீள்விக்கப்பட்டது