பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 533 பல்கலைக் கழக விதிமுறைகளுக்குத் தேவையான நாள்கள் வருகை தந்ததைச் சுட்டிக்காட்டி, தேர்வுகள் வரையில் விடுப்புக் கேட்டேன். என் பழைய வேலையில் சேர்ந்து கொள்ளவும் இசைவு கோரினேன். சனவரி முடிய இருந்து விட்டுப் போகும்படி, அவர் ஆணையிட்டார். அப்படியே தங்கியிருந்தேன். பிறகு திருப்பெரும்பூதூர் சென்றுதுணைப் பஞ்சாயத்து அலுவராகப் பணியேற்றுக் கொண்டேன். அலுவலைப் பார்த்தபடியே பாடங்களைத் திருப்பிப் படித்தேன். உரியகாலத்தில் சில நாள் விடுப்பு எடுத்துக் கொண்டுபோய்த் தேர்வு எழுதினேன். தேர்வு முடிவுகள் வந்தபோது வெற்றி பெற்றதை அறிந்து மகிழ்ந்தேன். o துணைப் பஞ்சாயத்து அலுவலர் ஒருவர். இரு பட்டங்கள் பெற்றால், அன்றைய சம்பள விகிதத்தின் உச்சமாகிய 75 ரூபாய் கொடுக்கலாமென்று அலுவலக விதி இருந்தது. அதை அடிப்படையாகக் கொண்டு எனக்குத் திங்களுக்கு எழுபத்தைந்து ரூபாய் ஊதியம் கோரி மாவட்ட ஆட்சிக்குழுத் தலைவருக்கு முறையாக விண்ணப்பம் அனுப்பினேன். எல்.டி. என்பது பட்டமா? அலுவலகத்தில் கீழ்நிலை எழுத்தர் ஒருவர் எல்.டி. என்பது பட்டம் அல்ல என்று எழுதி வைத்தார். எல்லோரும் கொக்கி போட்டுத் தலைவருக்கு அனுப்பி விட்டார்கள். தலைவர் பொதுக்கல்வி இயக்குநருக்கு - சர். மெவெரல் ஸ்டாதாமிற்கு - நேரடிக் கடிதம் எழுதி இதைப் பற்றி விளக்கம் கோரினார். 'எல்.டி. என்பது பட்டமே என்று இயக்குநர் எழுதினார். அப்புறம் என் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. நான் ஆசிரியப் பயிற்சி பெற்ற பிறகு கல்வித்துறையில் சேரவிரும்பினேன். ஆனால், விண்ணப்பம் கோரும் விளம்பரம் பல திங்கள் வரை இல்லை. நண்பர் அளகேசன். இதற்கிடையில், என் நண்பர் திரு. ஓ. வி. அளகேசனுக்குத் திருவெண்காட்டில் திருமணம் நடந்தது. மீஞ்சூர் பக்தவத்சலனாரின் மைத்துணி செல்வி பட்டம்மாளை மணந்து கொண்டார். நான் அத்திருமணத்திற்குச் சென்று இருந்தேன். பட்டம்மாளின் அண்ணன்கள் இருவரும் தி. கோ. பாலசுப்பிரமணியம், தி. கோ. சினிவாசன் - எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள்; மாப்பிள்ளை அவர்களுக்குப் புதியவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/576&oldid=787534" இலிருந்து மீள்விக்கப்பட்டது