பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 535 அப்போதுபெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் தம்மைச் சந்திக்க வரும் எல்லோரையும் மிகுந்த மரியாதை யோடு அழைப்பதைக் கவனித்தேன். பெரியவர் சிறியவர் என்று பாராமல் எவர் வந்தாலும் எழுந்து வரவேற்கும் பண்பினையும் நீங்கள் என்று குறிக்கும் நாகரிகத்தையும் பெரியாரிடம் இருந்து கற்று கொண்டேன். துணைத்தலைவர் அளகேசன், அலுவல்பற்றித் திருப்பெரும்பூதூர் வர நேர்ந்தது. முன்கூட்டியே எழுதி, ஒப்புதல் பெற்று, பகல் விருந்து அளித்தேன். பலரும் கலந்து கொண்டார்கள். இதில் மட்டும் ஊழியனாக நடந்து கொள்ளாது நண்பனாகவே உரிமை கொண்டாடினேன். 78. எனக்கு உதவிய நல்லவர்கள் பெரியார் விடுதலையானார் 1939 ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளிகள் திறந்தன. கட்டாய இந்திப்பாடம் மேலும் நூறு பள்ளிகளில் நுழைந்தது; கிளர்ச்சியும் தொடர்ந்தது. இதற்கு முன்னர், பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெரியார் ஈ.வெ.ராவின் உடல் நிலை மோசமாயிற்று. சிறை வாழ்க்கை அருடைய உயிருக்கே உலை வக்குமோ என்ற அச்சம் பொது மக்களிடம் பரவிற்று. சென்னை மாகாண ஆட்சி, அன்றைய முதல் மருத்துவராகிய டாக்டர் குருசாமி முதலியாரை, பெரியார் ஈ.வெ. ராவின் உடல் நிலையைச் சோதிக்க அனுப்பி வைத்தது. மருத்துவர், பெரியார் உடம்பைச் சோதித்தார். பெரியார் அதிக நோய்வாய்ப்பட்டு இருப்பதாகவும், அவரை விடுதலை செய்வதே நல்லது என்றும் பரிந்துரைத்தார். ஆட்சி அதை ஏற்றுக்கொண்டது. பெரியார், எதிர்பாராத வகையில் விடுதலை செய்யப்பட்டார். இந்திப் போராட்டம் எப்படி முடிந்தது? கட்டாய இந்திப் போராட்டம் எப்படி முடிந்தது? கட்டாய இந்தி கைவிடப்பட்டதால் முடிந்தது. காங்கிரக ஆட்சியே கட்டாய இந்தியைக் கைவிட்டதா? இல்லை. அப்படியானால் எப்படி எடுபட்டது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/578&oldid=787536" இலிருந்து மீள்விக்கப்பட்டது