பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 நினைவு அலைகள் - SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS நெடுநேரம் துணையிருந்து, உரையாடி ஏக்கம் பிறக்காதபடி பார்த்துக் கொண்டார். இரவு இரயில் நிலையத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். நான் புறப்படும்வரை - இரவு பதினோரு மணிவரை காத்திருந்து வழியனுப்பி வைத்தார். அவர் பண்பு என் உள்ளத்தை உருக்கியது. பொது நன்மையின் பொருட்டுத்தன்தந்தைக்கு நான் ஆற்றிய உதவியை - பெண்கள் உயர்நிலைப் பள்ளியை அனுமதித்ததை நினைத்து, எத்தனை பரிவோடு நடந்து கொண்டார், திருவாளர் காசிராமன். பலமுறை நன்மை பெற்றிருந்தும், வெற்றாளான பிறகு, கண்டும் காணாமற் போகும் பலருக்கிடையில், திரு. காசிராமன் போன்றவர் களோடு பழகுவது புண்ணினை ஆற்றுகிறது. 'உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து என்னும் திருக்குறளின் முழுப்பொருளை உணரத்தான் மூன்று முறை உயிர் தப்பினேன் போலும் என்று நினைத்தவாறு இரயில் வண்டியில் படுத்தேன். நான் நாட்டுப்புறத்தில் பிறந்து, இயற்கையின் மடியில் ஒடி ஆடி வளர்ந்தது முதல், என் கதை நினைவில் ஒடி விரியத் தலைப்பட்டது. 2. நான் பிறந்த சிற்றுார் நான் பிறந்தபொழுது, எவருக்கும் வேண்டாதவன் அல்லன். அப்போது ஊராரும் சுற்றத்தாரும் மிக மகிழ்ந்ததாகவே கேள்வி. 'இன்னும் பிள்ளை இல்லையே' என்று ஏங்கிப் புனிதபுரிகளைச் சுற்றிவரும்படி, என் பெற்றோர்களுக்குத் தொல்லை கொடுக்கு மளவிற்குத் தாமதிக்கவில்லை. 'இவ்வளவு விரைவில் பிள்ளையா?" என்று பேசும் படியும் பிறக்கவில்லை. இயற்கையாகவே காலாகாலத்தில் பிறந்தேன். தாய்க்கு ஆபத்து விளைவிக்காமலேயே பிறந்தேன். எந்த மருத்துவ மனையில் பிறந்தேன்? பிறந்தது மருத்துவ மனையில் அல்ல. மருத்துவமனைகளை அறியாத காலத்தில் பிறந்தேன். வீட்டிலே பிள்ளைப்பேறு. நாட்டுப்புறப் பழக்க உரிமை மட்டும் பெற்ற எந்தப் படிப்பும் அறியாத, மருத்துவச்சியே என் தொப்பூழ் கொடியை அறுத்தார் என் தம்பிகள் நால்வரும் அப்படியே தொல்லை தராமல் பிறந்தார்கள். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் சின்னஞ்சிறு வயது முதல் வீட்டு வேலைகளில் பங்கு கொண்டவர் என் தாயார். அந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/58&oldid=787538" இலிருந்து மீள்விக்கப்பட்டது