பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/580

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 537 - _ என் இளமை வாழ்க்கையில் என்னை அலைக்கழித்த இத்திசை திருப்பலை இதோடு விட்டுவிட்டு, என் கதையைச் சொல்லுகிறேன். இளந்துணை ஆய்வாளர் பதவி எல்.டி. பட்டம் பெற்று, திரும்பெரும்பூதூரில்துணைப் பஞ்சாயத்து அலுவலராக வேலை செய்து கொண்டிருக்கையில் பொதுக்கல்வி இயக்குநரின் விளம்பரம் ஒன்று வெளியாயிற்று. அது இளந்துணை ஆய்வாளர் பதவிகளுக்கு ஆட்கள் தேவை என்றது. அதற்குத் தொடக்க ஊதியம் ரூபாய் அய்ம்பதே! நான் ஏற்கெனவே, எழுபத்தைந்து ரூபாய்கள் மாத ஊதியம் பெற்றுக் கொண்டிருந்தேன். இருப்பினும், உட்பூசல் நிறைந்த உள்ளாட்சித் துறையிலிருந்து வெளியேறிவிட வேண்டுமென்னும் எண்ணம் உந்த, மேற்படி பணிக்கு விண்ணப்பித்தேன். அதற்கு அடிப்படைக் கல்வித் தகுதி, பி.ஏ. எல்.டி. மட்டுமே. நான் அதிகத் தகுதி (எம்.ஏ.எல்.டி) பெற்று இருந்ததால் தேர்ந்தெடுக்கப்படுவேன் என்று நம்பினேன். பல நாள்கள் ஓடின. நேர்முகப் பேட்டிக்கு அழைப்பு வந்தது. அதில் இயக்குநரே பேட்டி காண்பார் என்று இருந்தது. அப்போதைய இயக்குநர், சர். மெலெரெல் ஸ்டேதம், எனக்குக் கல்லூரி முதல்வராக இருந்தவர். அதுவும் எனக்குத் துணையாகும் என்ற நம்பிக்கை பெருகிற்று. குறிப்பிட்ட நாள், உரிய நேரத்திற்கு முன்னே, இயக்குநர் அலுவலகத்தைச் சேர்ந்தேன். விண்ணப்பதாரர்கள், அகர வரிசையில் அழைக்கப்பட்டார்கள். என் முறை வந்தது. நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கூடிப் பொங்க, அழைப்பிற்காகக் காத்திருந்தேன். என்ன ஏமாற்றம்! அவ்வரிசையில் முன்னே இருந்தவர்களும் பின்னே இருந்தவர்களும் அழைக்கப்பட்டார்கள் நான் அழைக்கப்படவில்லை. எங்களை வரிசைப் படுத்தி அனுப்பிக் கொண்டிருந்த அலுவலகக் கண்காணிப்பாளரை, பதற்றத்தோடு அணுகினேன். என்னை ஏன் அழைக்கவில்லை என்று கேட்டேன். துரை ஆணை என்று பதில் கூறினார். அதைக் கேட்டதும் தலையில் இடி வீழ்ந்தாற்போல் இருந்தது. நாடி தளர்ந்தது. செய்வதறியாது மீண்டும் என் இடத்தில் வந்து அமர்ந்து காத்துக் கொண்டிருந்தேன். கடைசி ஆளாக, நான் அழைக்கப்பட்டேன். அவநம்பிக்கையை விரட்டிவிட்டு புன்முறுவலை வலிந்து வரவழைத்துக்கொண்டு, இயக்குநர் அறைக்குள் நுழைந்தேன். இயக்குநர் எழுந்து நின்று, கைநீட்டி என் கையைக் குலுக்கி விட்டு, என்னை அமரச் சொன்னார். கல்வித்துறையின் கடைசிப் படியில் உள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/580&oldid=787539" இலிருந்து மீள்விக்கப்பட்டது