பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/582

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 539 என்முறை வந்தபோது, விடுப்பு இடத்தில் கூட என்னைப் போடாமல், தட்டிக்கழித்தது மதுரைப் பிரிவு ஆய்வாளர் அலுவலகம். மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் மனம் புழுங்கிக் கொண்டிருந்தேன். நல்வழி காட்டிய நல்லோர் அந்நிலையில் திருப்பெரும்பூதூரில் திருவிழா வந்தது. அதைக் காண ஏராளமான கூட்டம் வந்தது. சென்னை அரசின் தலைமைச் செயலகத்தில் உதவிச் செயலராகப் பணி புரிந்த திரு. சங்கரலிங்கதாசும் பொதுக்கல்வி இயக்ககத்தில் மேற்பார்வையாளராகப் பணி புரிந்த திரு. ரகுபதியும் திருவிழாவிற்கு வந்தார்கள். - வந்தவர்கள், என் நெருங்கிய நண்பர் திரு. சுப்பையதாசின் வீட்டில் தங்கினார்கள். சுப்பையதாசு, கூட்டுறவுத்துறையில் இளந்துணை ஆய்வாளராக இருந்தார். அம்மூவரும் யாதவ குலத்தைச் சேர்ந்த е Ф/ GUTLJ гТ45 Grт. திரு. சுப்பையா, விருந்தாளிகளிடம் என்னைப்பற்றிச்சொன்னாராம். என் கல்வி, நெறி, உறுதி, நேர்மை ஆகியவற்றைப் பற்றிக் கேள்விப்பட்ட அப்பெரியவர்கள், என்னைக் காண என் இடத்துக்கு வந்துவிட்டார்கள், என்னோடு அளவளாவினார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டுச் சில திங்கள் ஆனபிறகும் மூன்றாவது இடத்தில் நின்ற எனக்கு வேலை தராமல் காலந் தாழ்த்துவதைப் பற்றிக் குறைபட்டேன். 'எம். கே. வரதாச்சாரி அப்படித்தான் செய்வார். அந்த அலுவலகத்தில் மானேஜராகிய அவர் வைத்ததே சட்டம். நான் தலையிட்டு விரைவுபடுத்த முடியுமாவென்று பார்க்கிறேன்' என்றார் திரு. ரகுபதி. 'வேலை கொடுப்பதில்காலதாமதம் ஆனாலும் தேர்ந்தெடுக்கப் பட்ட பட்டியலில் நீங்கள் இருப்பதால், கல்வித்துறை கீழ்நிலை அலுவலர்களுக்கான தேர்வுகளை எழுதுங்கள். அதில் வெற்றிபெறப் பாருங்கள. 'அவற்றில் வெற்றிபெற்றதும் மேல்நிலைத் தேர்வுகளை (அரசிதழ் பதிவுபெற்ற அலுவலர்களுக்கானது) காலந் தாழ்த்தாது எழுதுங்கள். 'மாவட்டக் கல்வி அலுவலர் பதவி கிடைக்க எத்தனை ஆண்டுகளோ ஆகும் என்று எண்ணி, அதற்கான தேர்வுகளை எழுதுவதைத் தள்ளிப் போடாதீர்கள். எப்போதாவது சென்னைக்கு வந்தால், என்னை வந்து பாருங்கள்' என்றார். சங்கரலிங்கதாக கலகலப்பாகப் பேசி, எனக்கு ஊக்கமூட்டிவிட்டுச் சென்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/582&oldid=787541" இலிருந்து மீள்விக்கப்பட்டது