பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/588

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 545 ஒரு முறை ஒழலுரில் அவர் வீட்டுத் திண்ணையின்மேல் இருவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். நான் அளகேசனுக்கு முன்பு மாவட்ட ஆட்சிக்குழுவின் துணைத்தலைவராக மிகுந்த செல்வாக்குடன் இருந்த திருவொற்றியூர் டி. சண்முகம் அவர்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்ததைப்பற்றிப் பேச்சு வந்தது. அதைப்பற்றி மகிழ்ந்த அளகேசன், பேச்சுவாக்கில், இரகசியம் ஒன்றைப் பற்றிக் கேட்டார். என்னுடைய பதில் மின்னல் என வெளிப்பட்டது. 'அய்யா இன்று சண்முகம் அவர்களின் இரகசியத்தை உங்களுக்குச் சொல்லத் தொடங்கினால் நாளை உங்கள் இரகசியத்தை அடுத்தவருக்குச் சொல்லிப் பிழைக்கும் ஈனபுத்தி வந்து விடும்' என்றேன். அதை அளகேசன் நல்ல வண்ணம் ஏற்றுக்கொண்டார்; அதிர்ச்சியடையவில்லை; கசந்து கொள்ளவில்லை. பழைய நட்போடும் நேசத்தோடும் தொடர்ந்து என்னிடம் பழகி வந்தார். உத்திரமேரூர் பஞ்சாயத்தில் பிளவு இந்நிலையில், உத்திரமேரூர் பஞ்சாயத்தில் உறுப்பினர்களிடையே கடும் பிளவு ஏற்பட்டது. தலைவர் திரு. இராமசாமி அய்யரும், துணைத்தலைவர் திரு.ஆராவமுது அய்யங்காரும் அவர்களோடு இருந்த சில உறுப்பினர்களும் ஒரு பிரிவு. s திரு. வரதாராஜுலு நாயுடுவும் வேறு சிலரும் ஒரு பிரிவு. நாயுடு கட்சி சிறுபான்மை. ம் இரு பிரிவினரும் கீரியும் பாம்பும் போலச் சண்டையிட்டுக் கொண்டார்கள். சிறுபான்மையினர் புகார் மனுக்களை அனுப்பியபடியே இருந்தார்கள். நாள் தவறாமல், குற்றச்சாட்டுகள் மேலதிகாரிகளுக்குப் பறந்து கொண்டிருந்தன. சாதாரணமாக அந்தக் குற்றச்சாட்டுகளை, அப்பஞ்சாயத்தைத் தணிக்கை செய்யும் பொறுப்பையுடைய மாவட்டப் பஞ்சாயத்து அலுவலர் மட்டுமே விசாரிக்கலாம். தலைவர் இராமசாமி அய்யரும் துணைத்தலைவர் ஆராவமுது அய்யங்காரும் தீவிர காங்கிரசுக்காரர்கள். குற்றச்சாட்டுகள் மாவட்டம் முழுவதும் விளம்பரமாகிவிட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/588&oldid=787547" இலிருந்து மீள்விக்கப்பட்டது