பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ து சுந்தாவடி வேலு 17 காலத்தில் பரவலான பழக்கம் அது. அத்தகைய உடல் உழைப்பில் பழகியவர்களுக்குப் பிள்ளைப்பேறு எளிதாகும். நான் பிறந்த ஊர் எது? நெய்யாடு பாக்கம் என்னும் ஊர். செய்யாற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஊர். காஞ்சிக்குத் தென்கிழக்கே, எட்டுக் கல் தொலைவில் உள்ள ஊர். வாலாஜாபாத் என்றழைக்கப்படும் சிவபுரத்தின் நேர் தெற்கே, தான்கு கல் தொலைவில் இருக்கும் சின்னஞ்சிறிய ஊர். என் ஊர் பழமையான சிற்றுாராம். சோழன் கல்வெட்டு ஒன்றில் குறிக்கப்படும் பெருமை பெற்றிருக்கிறதாம். ஊரின் கீழ்க்கோடியில் உள்ள சிவன் கோயில் சோழர்காலக் கோயில் என்பது அறிஞர் கருத்து என் ஊருக்கு ஒரு முறை வருகை புரிந்த திருச்சிற்றம்பலம் மு. அருணாசலம் அவர்கள் கூற்றும் அப்படி யே. 'தங்கள் ஊரின் பெயர் நெய்யாடு பாக்கம். நெய்யாடி வாக்கம் என்பதே சரியான பெயர். இனி அப்படியே குறிப்பிடுங்கள்' என்று டாக்டர் இராசமாணிக்கனார் எனக்கு எழுதியிருந்தார். உழைக்கப் பிறந்த டாக்டர் இராசமாணிக்கனார், முறையாகத் தமிழைக் கற்று. புலவராகி, உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து, முதிர்ச்சி பெற்றவர். இந்த இனிய நண்பர், டாக்டர் இராசமாணிக்கனார். ஒய்ந்த நேரத்தில், தாமே முயன்று படித்து, சென்னைப் பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்றவர். பின்னர், கல்லூரிகளில் தமிழ் அய்யாவாகச் சீரிய தொண்டாற்றும் வாய்ப்புகளைப் பெற்று உயர்ந்தவர். கல்லூரி மாணவர்களுக்குத் திறமையாகக் கற்றுக் கொடுத்ததோடு ஆய்வுகளிலும் ஈடுபட்டார். கல்வெட்டு ஆய்வுகளில் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார். தமது ஆய்வின் கனியாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றுச் சிறந்தார். பின்னர், இவர்தம் வாழ்நாளின் இறுதியில் சில ஆண்டுகள் இவருடைய அரும்பணி சென்னைப் பல்கலைக்கழகத்திற்கே கிடை த்தது. அன்றைய சென்னைப் பல்கலைக்கழகம், பாடங்கற்பிக்கும் கழகம் அன்று. அக்காலத்தில் எவரும் முழுநேர ஆய்வுக்கு வருவது அருமை. தேவை பற்றி அல்லாது, இடங்களை நிரப்ப வேண்டுமென்பதற் காகவே, பலரை ஆசிரியப் பதவிகளில் வைத்திருந்த காலம் அது. எனவே டாக்டர் இராசமாணிக்கனார் வேலை செய்யாது பதவியில் ஒட்டிக்கொண்டு இருந்திருந்தால் யாரும் குறை சொல்லியிருக்க * Estoro I т-1 +... Һ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/59&oldid=787549" இலிருந்து மீள்விக்கப்பட்டது