பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/597

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554 நினைவு அலைகள் 'அய்யா! என் கடமையை மட்டுமே செய்திருக்கிறேன். என் அறிவுக்கு எட்டிய அளவு விழிப்போடு ஆய்ந்து பார்த்திருக்கிறேன்; துருவித் துருவிப் பார்த்த பிறகே சான்றுகளின் அடிப்படையிலே, இவ்வறிக்கையை எழுதியுள்ளேன். என்னையும் மீறி, பிழைகள் புகுந்திருந்தால், அதற்கான விலையைக் கொடுக்காமல் தப்ப முடியுங்களா?' என்று கூறினேன். என் குரலில் நம்பிக்கையும் உறுதியும் இருந்தது; சீற்றம் இல்லை. திரு. ரெட்டியார், என் அறிக்கையை வைத்துக்கொண்டு பஞ்சாயத்துப் பதிவு ஏடுகளோடு ஒப்பிடத் தொடங்கினார். நாற்பது அய்ம்பது மணித்துளிகள் நகர்ந்தன, அப்புறம். அடேயப்பா! பெரிய ஆளாயிருக்கிறாயே! எத்தனை இடங்களில், கணக்கில் உள்ளதைத் திருத்த முடியாதபடி எழுத்தால் எழுதிக் கையெழுத்திட்டு இருக்கிறாய்!” என்று தம் வியப்பைத் தெரிவித்தார். நான் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறிப்புகளுக்கு அப்படிக் கையெழுத்து இட்டிருந்தேன். அக்கணக்கையும் வைத்திருந்தேன். அதைக் கூறினேன். அவர் அசந்து போய்விட்டார். பிற்பகல், என்னை விடுவித்துவிட்டார். நான் ஊர் திரும்பினேன். அவர் இரு நாள்கள் தணிக்கை செய்தாராம். என்ன முடிவுக்கு வந்தார்? உதவிப் பஞ்சாயத்து அலுவலரின் அறிக்கையில் கண்டுள்ளவை அனைத்தும் உண்மையே என்று முடிவு செய்தார், அப்புறம்? உத்திரமேரூர்பஞ்சாயத்துத்தலைவரும்துணைத்தலைவரும் இத்தகைய பொறுப்பிற்கு முதன்முறை வந்தவர்கள். ஆகவே, அவர்களால் ஆனஅதிகச் செலவை, அவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும். குறைகளைத் திருத்திக்கொள்ள ஆறு திங்கள் கொடுப்போம். அவர்களைப் பதவிகளிலிருந்து நீக்கவோ, பஞ்சாயத்தைக்கலைக்கவோதேவையில்லை. இப்படி மாவட்ட ஆட்சிக் குழுவிற்கு அவர் பரிந்துரைத்தார். அதைக்குழு ஏற்றுக்கொண்டது. என் நேர்மையும் திறமையும் மெய்ப்பிக்கப்பட்டன. 81. நான் கொண்ட காதல் மேடுபள்ளங்கள் நிறைந்ததே நிலம். பல்வகை மக்களைக் கொண்டதே உலகம். உத்திரமேரூர் நிகழ்ச்சியைக் கொண்டு தவறாக மதிப்பிடக் கூடாது. எல்லாம் ஊழல் மயம் என்ற முடிவுக்கு வருதல் ஆகாது. கண்ணை உறுத்தும் கரும்புள்ளி, பெரிய வெண்சட்டையில் சிறுதுளி, என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/597&oldid=787557" இலிருந்து மீள்விக்கப்பட்டது