பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/600

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 557 அதில் ஒருவரை அவர் தேர்ந்தெடுத்து இருந்தார். அது ஒரு சார்புத் தேர்வா, தகுதித் தேர்வா என்பதே நான் கண்டறிய முயன்றது. இந்தக் கேள்விகளை, மெல்ல அவரிடம் கேட்டேன். அவர் பதில் என்ன? 'விண்ணப்பம் போட்டவர்கள் அனைவருமே பள்ளி இறுதி தேறியவர்கள். ஆகவே எல்லோரும் தகுதியடைவர்கள். நான் தேர்ந்தெடுத்தவர் எப்படித் தகுதியில்லாதவர்?' என்று கேட்டார். 'இவரைவிட அதிக மதிப்பெண் பெற்றவர் ஒருவர் இருக்கிறாரே' என்று அவரை மடக்கினேன். 'உண்மை. முதலில் எல்லோரையும் நேரில் பேட்டி கண்டேன். அதில் தெரிந்து கொண்டது, அதிக மதிப்பெண் பெற்றவர் ஏதோ வேறு வழியின்றி, இங்கு எழுத்தர் பணிக்கு வருகிறார்; வேறிடத்தில் வேலை கிடைத்தால், இதிலிருந்து ஓடிவிடுவார் என்பதாகும். 'என்னைவிட அதிகம் படித்த அதிகாரியாகிய தங்களுக்கு யோசனை சொல்வதாகத் தயவு செய்து நினைத்து விடாதீர்கள். உங்கள் வயதிற்கு மேற்பட்டது என் பட்டறிவு. 'அந்த அடிப்படையில் நான் தெரிந்து கொண்டது. நாம் விரும்பும் குதிரையைக் காட்டிலும் நம்மை விரும்பும் கழுதை நல்லது' என்பதே! 'நான் தேர்ந்தெடுத்துள்ள எழுத்தர், எனக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது ஒரு குறையல்ல. அவர் இவ்வேலையை விரும்புகிறார். எனவே, நீங்கள் கேட்ட கோப்புகளையெல்லாம் சட்சட்டென்n காட்ட முடிந்தது' என்றார். 'நல்ல வேலையின் வாயிலாக தன்னைத் தேர்ந்தெடுத்ததை அந்த எழுத்தர் நியாயப்படுத்தி விட்டார்' என்று எழுதி அனுப்பிவிட்டேன். திரு. பாலசுந்தரனாரின் வழி காட்டலை மறக்கவே இல்லை. கொள்கை மீது காதல் மதுராந்தகம் துணைப் பஞ்சாயத்து அலுவலராக இருந்த காலை, உலக வழக்குப்படி என்னுடைய 'பிரிவைச் சேர்ந்த பல ஊராட்சித் தலைவர்களோடு உறவு ஏற்பட்டது. அதுமட்டுமா? அப்போது தூத்துக்குடி நகராட்சி ஆணையராக இருந்த திரு. வ.ந. சுப்பராயனை விடுமுறையில் வல்லிபுரம் வந்திருந்த இடத்தில், அறிமுகம் செய்துகொள்ளும் வாய்ப்புப் பெற்றேன். அவர்களுக்கு என்னை மிகவும் பிடித்து இருந்தது. வெற்றிலை போடல், சிகரெட் பிடித்தல் முதலிய எவ்விதப் பழக்கமும் இல்லாத என்னைப் பற்றி, அவர்கள் பெருமைப் பட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/600&oldid=787562" இலிருந்து மீள்விக்கப்பட்டது