பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/601

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

558 நினைவு அலைகள் ஆனால், திருமணம் செய்துகொள்ளாமல் தட்டிக் கழிக்கிறேனே என்றும் ஏக்கப்பட்டார்கள். சிற்சிலர், உறவுப் பெண்களைக் கொடுக்கலாமென்றும் குறிப்புக் காட்டினார்கள். நான் ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டுவிட்டேன். ஏன்? எவரிடமாவது காதல் கொண்டிருந்தேனா? இல்லை. எந்தக் கன்னியின்பாலும் காதல் கொள்ளவில்லையே ஒழிய, ஒரு கொள்கையின் மேல் தனியாக் காதல் கொண்டிருந்தேன். அக்கொள்கை என்ன? நான் பிறந்த சாதிக்கு உரியவனாக வாழ்வதில்லை; மனித சாதியைத் சேர்ந்தவனாகவே வாழ்வது' என்னும் கொள்கைக்கு வாழ்க்கைப்பட்டு விட்டேன். சாதித் திருமணத்தைப் போக்கி, சமத்துவத் திருமணத்தை என்னுடைய மூச்சாக்கியது எவர்? தந்தை பெரியார்; அவருடைய தன்மான இயக்கம். அவரும் அவருடைய இயக்கமும் தோன்றியிராவிட்டால் நான் எப்படியிருந்திருப்பேன் என்று எண்ணிப் பார்க்கிறேன். சிரிப்பு பொங்குகிறது! ஏன்? உலகத்தோடும் காலத்தோடும் ஒட்டி ஒழுகத் தெரியாத, இறுமாப்புக் கொண்ட சிவபிரானின் நெற்றிக் கண்ணிலிருந்து பிறந்தவர்கள் என்று கிழங்கள் சொல்வதைக் கிளிப்பிள்ளையைப் போல் சொல்லிக் கொண்டு, திண்ணையின் மேல் உட்கார்ந்து இருக்கும் பண்ணையாராக இருந்திருப்பேன். பல இலட்சம் 'சாதிப்புழுக்களை மனிதராக மாற்றிய உயிரியல் உளவியல் வித்தகர் தந்தை பெரியார் ஆவார். அவரது பெருவாழ்வு, நீண்டதுமட்டுமல்ல! நிறைந்ததுங்கூட. எதனால் அது நிறைந்தது? புரட்சிகரமான சிந்தனைகளால், தொண்டுகளால், சாதனைகளால். இவற்றின் இமயமாக விளங்கிய பெரியார், காட்சிக்கு எளியர்; பேச்சுக்கு இனியர்; பழகுதற்கோ? பரிவுடைய சிறந்த பண்பாளர். புரட்சிப்பார்வை, பெரியார் ராமசாமியோடு பிறந்தது. அவர் பள்ளிப் பருவத்திலேயே, கொடுமையான சாதிக் கட்டுகளை உடைத்தெறிந்தார். பல சாதி மக்களோடும் புழங்கினார். பல சாதியினர் வீடுகளில் மகிழ்ச்சியுடன் நீர் அருந்தி, சாதிப் பிரிவுகைைள ஏதிர்த்துப் புரட்சி ச்ெய்தார். அப்புரட்சிப் போக்கு, பிள்ளைக் குறும்பாக நின்றுவிடவில்லை. பொதுத் தொண்டாக ஓங்கிப் பெருகிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/601&oldid=787563" இலிருந்து மீள்விக்கப்பட்டது