பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/604

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 . வேண்டப்படுபவன் என்பால் அன்பு கொண்டோர் என்னுடைய பிரிவைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள் என்னிடம் அன்பாக இருந்ததோடு, என்னுடைய சாதி ஒழிப்புப் புத்தியைப் பொறுத்துக் கொண்டார்கள். அது அவர்களுடைய பண்பாட்டைக் காட்டியது. அதோடு, அன்று கோடைக்கால எழு ஞாயிறாக ஒளிவிட்டதன்மான இயக்கம் விளைவித்த, மாற்ற முடியாது இருந்த மனமாற்றத்தையும் அது காடடிறறு. தன்மான இயக்கம் வேரூன்றித் தழைப்பதற்கு முன்பு, சைவ முதலியார்கள்', 'அசைவ முதலியார்கள் வீடுகளில் நீர் அருந்தவும் மாட்டார்கள். அசைவ முதலியார்கள் எவ்வளவு பெருநிலையில் இருப்பினும், சைவர்கள் வீட்டில் விருந்துக்கு அழைக்கத்தயங்குவார்கள்; விரும்பவும் I TடடTதி Tெ. சாதிக்கட்டுப்பாடு அவ்வளவு அதிகமாக இருந்த காலம் அது. அக்கட்டுப்பாட்டைப் பின்பற்றாத என்னிடமும் உள்ளன்போடு பழகிய 'சைவர்கள் பலராவர். அவர்களில் சிலரையாவது இங்கே குறிப்பிடுதல் என் கடமை. ஒழலுர் முத்துக்குமாரசாமி, வல்லிபுரம் வைத்தியநாதர், பாலூர் விசுவநாதர், மாணாமதி சுப்பராயன், சிறுகுன்றம் சுப்பராயன், திருவானைக்காவல் இராசசேகரன் ஆகியோர் என்நினைவில் பசுமையாக உள்ளனர். மதுராந்தகத்தில் நான் தங்கியிருந்தபோது, எனக்குப் பெருந் துணையாக விளங்கியவர் பொலம்பாக்கம் திரு. முத்துமல்லா என்பவர். அவர், என் காலத்து மாணவர். சென்னையில் இராமகிருஷ்ண இல்லத்தில் தங்கிக் கல்வி கற்றவர். அவ்வாழ்க்கை, வழி வழி பெற்ற ஒழுக்கத்தையும் பண்பையும் முத்துமல்லாவிடம் கட்டிக்காத்தது. அவர் குணசீலர்: பழகுதற்கு இனியவர்: ஜமீந்தார் மரபிலே வந்தாலும் ஆடம்பரமற்ற தோற்றமுடையவர். செல்வத்தால் முளைக்கும் செருக்கோ பிற தீய பழக்கங்களோ இல்லாதவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/604&oldid=787566" இலிருந்து மீள்விக்கப்பட்டது