பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 565 குடியானவர் மனைவி, உழைப்பதற்குச் சுணங்கினால், அந்த வீடு இருள் சூழ்ந்த வீடாகிவிடும். விருந்தோம்ப அலுத்துக் கொள்ளும் மனைவி, நிலக்கிழாரின் மனைக்குத் தக்கவள் ஆகாள். எளிதில் சலித்துக் கொள்ளும் மனையாள், பொது வாழ்க்கை யோனுக்குத் தக்க துணையாகாள். எப்போதும் சிரித்தபடியே தோன்ற மறுப்பவள். துதுவரின் மனைக்குப் பொருந்தாள். எனவே, எவர் எத்தகைய வாழ்க்கை நடத்தத் திட்டமிடுகிறாரோ அத்தகைய வாழ்க்கைக்குத் தக்கவரையே மனைவியாகக் கொள்ளல் தகும். நானோ, இளமைப்பருவத்திலேயே, சில குறிக்கோள்களுக்கு என்னை ஒப்படைத்து விட்டேன். சாதியற்ற சமத்துவ சமுதாயத்தோடு நின்றுவிடவில்லை என் விழைவு. எல்லோர்க்கும் எல்லாம் வழங்கவல்ல சமதர்மத்தையும் என் வாழ்க்கையின் குறிக்கோளாக ஏற்றுக் கொண்டேன். முன்னர் என் நண்பர்கள் சொல்லிய பெண்கள் சராசரி இந்தியப் பெண்களுக்குமேல் உயரமாட்டார்கள். அதாவது நகை தாங்கிகளாக வாழ்வதையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொள்ளக் கூடுமென்று பட்டது. எனவே, முன்னர் வந்த பெயர்களைப் பற்றிச் சிந்திக்கவும் இல்லை. பணிவோடு மறுத்து விட்டேன். இப்போது, தோழி வழியாகத் தெரிவித்த காதலை ஏற்பதா? புறக்கணிப்பதா? வியப்பில், உணர்வுப் பொங்கலில் முடிவு செய்வது, தொலை நோக்கு ஆகாது என்று மனத்தில் பட்டது. எனவே, இரண்டு மூன்று நாள்கள் வரை என்ன பதில் எழுதுவது என்று முடிவு செய்யவில்லை. என் பதில் ஆழந்த சிந்தனைக்குப் பிறகு, ஒரு தெளிவு பிறந்தது. உள்ளதை மட்டுமல்லாது விழைவதையும், அதாவது என் குறிக்கோளையும் ஒளிவு மறைவின்றிக் கூறிவிடுவது. அதற்குப் பிறகும் என்னை மணக்க விரும்பினால், அப்போது முடிவு எடுப்பது பொருத்தம் என்று தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/608&oldid=787570" இலிருந்து மீள்விக்கப்பட்டது