பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/611

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

568 நினைவு அலைகள் 'இது அளவுக்கு மீறிய உரிமை கொண்டாடுவதாகத் தோன்றினால், எங்களை மன்னிக்க வேண்டுகிறோம்.' மேற்படி கடிதத்தைப் படித்துப் பார்த்தேன். ஆனால் உடனே பதில் எழுதவில்லை. எழுதும்முன் ஆழ்ந்து சிந்தித்தேன். பல கோணங்களில் இருந்து சிந்தித்தேன். காந்தம்மாள் குடும்பம் எளிய வாழ்க்கைக்கு உடன்படுவது உண்மையாக இருக்குமா? சாதாரண, நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காந்தம்மாவிடம் படாடோபத்தைப் பார்த்ததில்லை. அவருடைய அக்காள் குஞ்சிதமும் தங்கை வெங்டேச அம்மாளும்கூட ஆடம்பரமாக இருந்ததைக் கண்டது இல்லை. மூவரில் எவருமே நகைதாங்கிகளாகக் காட்சியளித்ததில்லை. மூவரும் தந்தை பெரியார் அறிவுரைப்படி, நகைப் பித்தும் சேலைப் பித்தும் இல்லாதவர்களாகத் தோன்றினார்கள். எனவே, எளிமை - அக்குடிப் பண்பு, வளர்ப்பு முறை என்று ஊகித்தேன். அது மட்டுமா? ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பது முதல், குத்துளசி குருசாமியின் மாமனாரான, திருவாரூர் சுப்பிரமணியன் வீடுதான், சுயமரியாதை இயக்க முன்னணி வீரர்கள் பலருக்குச் சென்னையில் தங்குமிடம். திரு. சுப்பிரமணியம் பிடில் வாசிப்பதில் சிறந்தவர். சுயமரியாதை இயக்கத்தவரான பிறகு அதை விட்டுவிட்டார். 'தமிழர் தலைவர் என்னும் தலைப்பில் பெரியார் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் சாமி சிதம்பரனார். அதற்குக் காரணமானவர் குருசாமி. அதை வெளியிட்டது தமிழ் நூல் நிலையம். அதன் உரிமையாளர் திரு. சுப்பிரமணியம். வீட்டுக்கு விருந்தினர்கள் வரும்போது வீட்டிலுள்ள நகையொன்று அடகுக் கடைக்குப் போகும்; பல நாள்களுக்குப் பிறகே மீட்க நேரிடும். அதைப் பற்றி வீட்டுப் பெண்மணிகள் எவரும் முகங்கோனியது இல்லை, முணுமுணுத்தது இல்லை என்று நண்பர்கள் கூறியது. அவ்வப்போது என் காதுகளில் வீழ்ந்தது உண்டு. எனவே, பிற்காலத்தில் அப்படி ஒரு நிலையேற்பட்டால் காந்தம்மா கலகம் செய்யமாட்டாரென்று நினைத்தேன். மற்றொன்றையும் எண்ணிப் பார்த்தேன். அது என்ன? மனைத்தக்க மாண்பு இருக்குமா என்பதே. குடியானவரை மணப்பதற்கு இருக்க வேண்டிய மாண்பு ஒரு வகை; அரசியல் தலைவருக்கு மனைவியாக நினைப்பவருக்குத் தேவையான மாண்பு பிறிதொரு வகை. சாதாரண அரசு ஊழியரின் மனைவிக்குத் தேவைப்படும் மாண்பு மற்றொரு வகை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/611&oldid=787574" இலிருந்து மீள்விக்கப்பட்டது