பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/616

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 573 அலுவல்களில் இருப்போர் பலர், பட்டாளத்தில் சேர்ந்து விடுவார்கள். எனவே பல இடங்கள் கலியாகும். உனக்கு விரைவில் கல்வித்துறை வேலை கிடைக்கும். அது மட்டுமல்ல; பதிவு உயர்வுகளும் துரிதமாகலாம். இப்படி என்னிடம் கூறியவர்கள் உண்டு. அத்தனை பேருமே நல்வாக்குச் சொல்லும் குடுகுடுப்பைக் காரர்களாக இல்லை; சிலருடைய கணிப்பு வருமாறு: 'போர் வந்து விட்டது; சண்டைச் செலவிற்கே முன்னுரிமை தருவார்கள். எனவே மற்றச் செலவினங்களில் கடுமையான வெட்டு வரலாம். "சிக்கனம் செய்ய வேண்டுமென்பதற்காக இருக்கிற பதவிகளைக் கூட குறைக்கக்கூடும். அதனால் நீ கல்வித் துறையில் சேர்வது தள்ளிப் போகலாம். அந்த வாய்ப்பே கை தவறிப் போக நேரிடலாம். "நாங்கள் இப்படிச் சொல்வதைப் பற்றி வருத்தப்படாதீர்கள். எதற்கும் ஆயத்தமாயிருப்பதே நல்லது என்பதற்காகச் சொல்லுகிறோம். இப்படிக் கூறியவர்களுக்குக் குறைவில்லை. உரிமையோடு கிண்டல் செய்யக் கூடிய என் நண்பரிகளில் சிலர். 'ஏனப்பா உன் பெயரையும் என் பெயரையும் சொன்னால் வருவதுகூடத் திரும்பி ஓட்டமாக ஒடிவிடுமே! நமக்கு அவ்வளவு அதிர்ஷ்டக் கட்டை என்று பரிதாபப்படுவார்கள். மூச்சுவிடும் காற்றிலே இரண்டறக் கலந்து, இந்திய சமுதாயத்தை எலும்பற்ற கோழைகளாக, செயலற்ற பொருள்களாக மாற்றிவிட்ட, அதிர்ஷ்டக் கட்டைக் கோட்பாடு அடிக்கடி என் காதுகளில் வீழ்ந்தது. அத்தகைய பேச்சுகளைப் பொருட்படுத்தாது உள்ளத்தை உறுதிப்படுத்திக் கொள்வேன். 'ஒடுமீன் ஒட, உறுமின் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு' என்று, பிள்ளைப் பருவத்தில் படித்தது அவ்வப்போது நினைவிற்கு வரும்; ஊன்று கோலாகி, நடத்திச் செல்லும். ஆசிரியர் பயிற்சியில் காந்தம்மாள் அப்படி ஊர்ந்து கொண்டிருக்கையில் காந்தம்மா, ஆய்வுப் பணியை முடித்து விட்டார். அதற்கான கட்டுரையையும் படைத்து விட்டார். அடுத்து என்ன செய்வது? அன்றைக்கும் அது எளிதில் பதில் கூறவியலாத சிக்கலான கேள்வியாகும். அக்காலத்தில் கல்லூரிகள் மிகமிகச் சிலவே. அவற்றில் பதவிகள் H காலியாவது பல ஆண்டுகளுக்கு ஒரு முறையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/616&oldid=787579" இலிருந்து மீள்விக்கப்பட்டது