பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/617

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

574 நினைவு அலைகள் ஆசிரியப் பயிற்சி பெற்று எல்.டி. பட்டம் பெற்றவர்களே, கல்லூரி ஆசிரியர்களாகப் பணிபுரிய முடியும் என்பது அக்கால விதிமுறை. எனவே, காந்தம்மா ஆசிரியப்பயிற்சியில் சேரவேண்டுமென்று அவருடைய பெற்றோர்கள் விரும்பினார்கள். இக்காலத்தைப் போல, அன்று பெண்களுக்குப் பல வேலை வாய்ப்புகளில்லை. மருத்துவப் பணி, ஆசிரியப்பணி இவ்விரு வாய்க்கால்களையே தேட வேண்டும். வேறு வாய்ப்பின்மையால் காந்தம்மாவெல்லிங்டன் சீமாட்டி பயிற்சிக்கல்லூரிக்கு மனுப்போடப் போவதாக, தோழியின் கடிதத்தின் வாயிலாக, எனக்குத் தகவல் வந்தது. அந்நடவடிக்கைக்கு ஒப்புதல் கூறிப் பதில் அனுப்பினேன். அக்காலத்திலும் ஆசிரியப் பயிற்சிக்குப் பெண்களுக்குக்கூட இடம் கிடைத்தல் கடினம். வெல்லிங்டன் சீமாட்டி கல்லூரியின் அன்றைய முதல்வர் செல்வி ஜெராடு என்ற ஆங்கில அம்மையாரை அடுத்து அடுத்துப் பார்த்து, தொடர்ந்து நச்சரித்து வந்ததால், காந்தம்மாவிற்கு இடம் கிடைத்தது, மகிழ்ச்சியோடு பயிற்சி பெறத் தொடங்கினார். தோழர் குருசாமி வீட்டிற்கு அவ்வப்போது சென்று வரும் பழக்கம், என் அலுவல் பற்றி ஏற்பட்டது. பின்னர், கொள்கை அடிப்படையில் வளர்ந்தது. o காந்தம்மாவை ஆய்வுக் கூடத்தில் கண்டு பேசிய பிறகு அப்படியே தொடர்ந்தது. அது குறையவும் இல்லை; கூடவும் இல்லை. நான் அங்கே இருந்து தோழர் குருசாமியோடு உரையாடும்போது நானும் காந்தமும் ஏதிலார் போலப் பொது நோக்கினைக் கையாள்வோம். என் வாழ்க்கை ஆமையென நகர்வத்ால், உலகமும் அதே நடையில் செல்லுமா? செல்லாது; செல்லவில்லை. பிரிட்டனுக்கு இந்திய அரசு ஆதரவு வைசிராயின் அறிவிப்பு இரண்டாம் உலகப்போர் மூண்டது; கோடி கோடி மாந்தரின் அழிவிற்குக் காரணமாயிருந்தது. இந்திய அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அப்போரில் இந்திய அரசு, பிரிட்டனுக்கு ஆதரவாக நிற்கும் என்று அறிவிக்கப்பட்டது. எவரால் அறிவிக்கப்பட்டது? இந்தியாவில் ஆங்கில ஆட்சியின் தலைவராக இருந்த வைசிராயால் அறிவிக்கப்பட்டக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/617&oldid=787580" இலிருந்து மீள்விக்கப்பட்டது