பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 நினைவு அலைகள் நான் பிறந்த தெருவில், இந்த மூன்று வீடுகள் தவிர மற்றயவை எல்லாம் எங்கள் உறவினர் வீடுகள். பெருமாள் கோயில் பூசைமுறை வரும் ஆண்டில். அக்குருக்களுக்குச் சிவன் கோயில் பூசை வராது. என் அப்பாவின் அப்பாவிற்கு மூன்று சகோதரர்கள். எனவே பங்காளிகள் வீடு நான்கு. தாத்தாவிற்கு இரு சகோதரிகள். அவர்களும் உள்ளூரிலேயே வாழ்க்கைப் பட்டார்கள். அவர்கள் வீடுகள் இரண்டும் எதிரில் இருந்தன. என் தாய் வீடும் அவ்வூரிலேயே தாயின் மாமாவினுடைய வீடு ஒன்று. ஆக எட்டு வீடுகள் என் உறவினர் வீடுகள். பதினொரு வீடுகளைக் கொண்ட எங்கள் தெரு, அந்தக் கிராம நிலைக்கு அகலமானதே. என்னுடைய பிள்ளைப் பருவத்திலும் இளமைப் பருவத்திலும் தெருவில் குழி பள்ளங்கள் நிறைய இருக்கும். ஒவ்வொரு வீட்டுக்காரரும் அவ்வீட்டுக்கு எதிரில் உள்ள தெருவைச் சாணி பூசி மெழுகி வைத்துக் கொள்வார்கள். எங்கள் தெரு தூய்மையாக இருக்கும். ஒவ்வொரு வீட்டுக்கும் புறக்கடைத் தோட்டம் உண்டு; அதில் குடிநீர்க் கிணறும் தனியே உண்டு. மற்றொரு தெரு வன்னியத் தெரு. அதில் ஒரு தச்சர் குடும்பம், இரு சலவைத் தொழிலாளி குடும்பங்கள், இரு நாவிதர் குடும்பங்கள், ஒரு முஸ்லீம் குடும்பம் போக மற்ற முப்பது, நாற்பது வீடுகள் வன்னியர்களின் வீடுகள். அவர்கள் பயிர்த்தொழில் ஒன்றையே நம்பி வாழ்ந்தார்கள். ஆதி திராவிடர்கள் ஊருக்குக் கிழக்கே ஒரே குடியிருப்பாக வாழ்ந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒரே சாதி. எனவே அவர்களுக்குள் உட்சாதிச் சண்டை இல்லை. பெரும்பாலானவர்கள் விவசாயக் கூலிகள். இயற்கை வளம் பெற்ற கிராமம் என் பிள்ளைப் பருவ நெய்யாடி வாக்கம் மரங்கள் சூழ்ந்த ஊர். அநேகமாக எல்லா வீட்டுப் புறக்கடையிலும் சில பல தென்னை மரங்கள் இருந்தன: காய்த்தன; ஊர்த் தேவைகளுக்கும் அதிகமாகக் காய்த்தன. அக்கம் பக்கத்து ஊர்க்காரர்கள் திருமணம், திருவிழாத் தேவைகளுக் கான தேங்காய்களை வாங்கிப்போக எங்கள் ஊருக்கு வருவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/62&oldid=787583" இலிருந்து மீள்விக்கப்பட்டது